•Thursday, September 22, 2011
புளியோதரை எனக்கு ரொம்ப புடிக்கும். அதுக்கு தேவையான புளிக்காச்சல் செய்வது கஷ்டம்னு நினச்சுகிட்டு இருந்தேன். அப்புறம் ஆடி பதினெட்டுக்கு கலந்த சாதம் செய்யணும்னு புளிக்காச்சல் எப்படி செய்யறதுன்னு அம்மா கிட்ட கேட்டு செய்தேன். எல்லோரும் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நிறைய தடவை புளிக்காச்சல் செய்துவிட்டேன். செய்வதும் ரொம்ப ஈஸிதான்.
தேவையான பொருட்கள் :
தனியா - 1 / 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 / 2 கரண்டி
கடலைப்பருப்பு - 1 / 2 கரண்டி
வெந்தயம் - 1 / 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 16
புளி - ரெண்டு எலுமிச்சம் பழம் அளவு
எள்ளு - 1 / 2 கரண்டி
நல்லெண்ணெய்
மஞ்சள் பொடி
உப்பு
கடலைக்காய்
பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை :
புளி, உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைத்து கொஞ்சம் திக்காக கரைச்சு வச்சுக்கணும்.
கடலைக்காய் வறுத்து தோல் நீக்கி வச்சுக்கணும்.
தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் - 8
எள்ளு இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து பவுடர் பண்ணி வச்சுக்கணும்.
இந்த பவுடர் ரெண்டு, மூணு தடவை புளிக்காச்சல் செய்ய உதவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ( கொஞ்சமாக ), பெருங்காயம், காய்ந்த மிளகாய் - 8
போட்டு நல்லா வதக்கி புளிக்கரைசலை விட்டு கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு நல்ல சுண்ட கொதிக்கவிடனும்.
நல்லா கொதிச்சு சுண்ட வந்ததும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிட்டு,
சூட்டுடன் 3 ஸ்பூன் அரச்சு வச்சு இருக்க பவுடர் போட்டு கிளறனும்.
புளிக்காச்சல் ரெடி. கடலைக்காய் வருத்ததை இப்போவே சேர்த்துக்கலாம்.
புளிப்பு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி இல்லைனா சாதம் கலக்கும் போது, தனியாக வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் வைத்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை வறுத்து கொட்டி, கடலைக்காய் பருப்பும் போட்டு கலந்துக்கலாம்.
இந்த புளிக்காச்சலை சாதத்தில் போட்டு கலந்து, தொட்டுக்க வடாம் போட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.
11 comments:
எனக்கு ரொம்ப பிடிச்ச சாதம் .ரெசிபிக்கு நன்றி .
(உருளைவறுவல் கறி இப்ப அடிக்கடி எங்க வீட்ல செய்றேன் )
வாவ்...ரொம்ப சூப்பரான ரெசிபி...எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
நல்லாத்தான் இருக்கு. ஆனா... வேலை அதிகமா இருக்கும் போல இருக்கே!
மிகவும் பிடித்த ரெடிப்பி..அருமையாக செய்து இருக்கிங்க
வாவ்...ரொம்ப சூப்பரான ரெசிபி...எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
என்னோட உருளைவறுவல் கறி செய்வதில் சந்தோஷம். உங்களுக்கும் இந்த கலந்த சாதம் புடிக்குமா.... நன்றி
angelin
அடடா.... புளிகச்சல் சாதம் புடிக்காதவங்களே இல்லை போல இருக்கே.... :) நன்றி கீதா.
நன்றி இமா. பவுடர் அரச்சு வச்சுகிட்டா சீக்கிரம் பண்ணிடலாம். ரொம்ப ஈஸி தான் இமா. : )
நன்றி சிநேகிதி.
நன்றி ராஜேஷ்.
எனக்குரொம்பபிடிக்கும்