•Monday, October 03, 2011
இந்த வெங்காய சட்னி எனக்கு ரொம்ப புடிக்கும். ஒவ்வொரு டிபன்க்கு ஏத்த மாதிரி சட்னி தொட்டுண்டு சாப்பிடுவேன். இட்லி, தோசைக்கு இந்த சட்னி தான் பெஸ்ட் காம்பினேஷன். இந்த சட்னி இருந்தால் பத்து இட்லி கூட சாப்பிடலாம்.
வெங்காயம் - 4
இட்லிக்கு தொட்டுக்க இந்த சட்னி போட்டுக்கும் போது, சட்னி மீது கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து தொட்டுண்டு சாப்பிட்டா........ சூப்பர் ரா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 4
தக்காளி - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு
புளி
எண்ணெய்
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும்.
வெங்காயம் லைட்டாக கலர் மாறும் போதே இறக்கி, ஆறவைத்து கூட புளி, உப்பு போட்டு அரைத்தால் வெங்காய சட்னி தயார்.
இட்லிக்கு தொட்டுக்க இந்த சட்னி போட்டுக்கும் போது, சட்னி மீது கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து தொட்டுண்டு சாப்பிட்டா........ சூப்பர் ரா இருக்கும்.