•Sunday, June 12, 2011
போண்டா செய்ய தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு
உப்பு
அரிசி மாவு
தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
தேங்காய்,
பொட்டுகடலை
பச்சை மிளகாய்
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை :
உளுத்தம் பருப்பு 1 /2 மணி நேரம் ஊற வச்சு தண்ணி கொஞ்சமா விட்டு அரச்சுக்கணும்.
மாவுல கொஞ்சமா அரிசி மாவு, உப்பு, மிளகு, சின்ன சின்னதாய் நறுக்கிய தேங்காய் போட்டு நன்றாக பிசையனும்.
எண்ணெய் காய வச்சு அதில் உருட்டி போட்டு பொறித்து எடுத்தால் போண்டா தயார்.
தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து தனியா எடுத்துக்கணும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சட்னி ரெடி.
ஸ்னாக்ஸ்
|

4 comments:
:P:P:P
பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா! உளுந்துவடைய உருட்டிப்போட்டு போண்டான்னு சொல்றீங்க!;) இட்ஸ் ஓக்கே,ஷேப் எப்படி இருந்தா என்ன? :P
வாவ்...எனக்கு ரொம்ப பிடித்த போண்டா...சூபப்ர்ப்...
மகி...இது தானே போண்டா...கரக்ட் தானே...எங்க வீட்டில் இது தான் போண்டா என்று அம்மா செய்வாங்க..இப்ப நானும்...
கீதா,உளுந்துவடைமாவிலே செய்ததுபோலவே இருந்ததால நான் சும்மா காமெடிக்கு சொன்னேன்!
BTW,மைசூர் போண்டா கேள்விப்பட்டிருக்கேன்,உருளைகிழங்கு மசாலாவை கடலைமாவில் தோய்த்து பொரிப்பதுதானே போண்டா? :)
பேரிலே என்னங்க இருக்குது..சூடா சாப்பிட்டா எல்லாமே சூப்பரா இருக்கும்! ;)
நன்றி கீதா. நன்றி மகி. தட்டி போட்டா வடை. உருட்டி போட்டா போண்டா மகி. நீங்க சொன்னது சரி தான் சூடா சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும்.