•Saturday, June 25, 2011
என்னுடைய இனிய தோழி ஒருத்தங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள். அவங்களை நான் நேரில் இதுவரை பார்த்ததில்லை. மே 2009 - லிருந்து எனக்கு ஒரு நல்ல தோழியாக இருக்காங்க. அவங்களுக்கு இந்த வருஷம் என்னோட ப்ளாக் -ல இருந்து வாழ்த்துக்களை சொல்ல நினைச்சேன். இனிய கல்யாண நாள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி . :)
உங்களுடைய பிறந்த நாளுக்கு ஸ்வீட் மற்றும் பூ செண்டை தரேன். வாங்கிகோங்க மகி. . :)
அவங்களுக்கு மஞ்சள் பூவென்றால் ரொம்ப புடிக்கும். அவங்களோட பேரு ரெண்டு எழுத்து. அவங்க யாருன்னு கண்டு புடிச்சிட்டீங்களா ????? சீக்கரம் போய் உங்களோட வாழ்த்துக்களையும் சொல்லுங்க....
அப்படி உங்களால கண்டு புடிக்க முடியலைனா அந்த ஸ்மைலிஸ் முன்னாடி கிளிக் பண்ணி பாருங்க.
கேசரி ஈஸியா செய்ய கூடிய ஒரு ஸ்வீட். 1 : 1 1 /2 : 2 இதான் இந்த கேசரி செய்வதற்கான ரேஷியோ.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
தண்ணீர் - 1 1 /2 கப்
சக்கரை - 2 கப் ( இனிப்பு அதிகம் வேண்டும்னு நினைக்கறவங்க தேவையான அளவு அதிகரிச்சுக்கலாம் )
ஏலக்காய்
முந்திரி பருப்பு
நெய்
கேசரி பவுடர்
செய்முறை :
வாணலியில் நெய் கொஞ்சம் விட்டு முந்திரி பருப்பு வறுத்து தனியாக எடுத்துக்கணும்.
அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு ரவை போட்டு வருத்துக்கணும்.
அதுல 1 1 /2 கப் தண்ணீரை விட்டு கேசரி பவுடர் போட்டு நன்றாக கிளறனும். ரவை நன்றாக வெந்து வரும் போது 2 கப் சக்கரை போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி அதுல ஏலக்காய் தட்டி போட்டு, வறுத்த முந்திரியும் போட்டால் கேசரி ரெடி.
Wishes
|

14 comments:
//மஞ்சள் பூவென்றால் ரொம்ப புடிக்கும். அவங்களோட பேரு ரெண்டு எழுத்து. அவங்க யாருன்னு கண்டு புடிச்சிட்டீங்களா ?????// ;) கண்டு புடிச்சிட்டேன் ப்ரியா. ;))
அவங்க ரெண்டுபேருக்கும் என்னோட மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள். Happy birthday dear M___. ;)
வாழ்த்த வயதில்லை மகிமா
இருந்தாலும்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
பதிவிட்ட உங்களுக்கும்
வாழ்த்துக்கள் ..
//ஸ்மைலிஸ் முன்னாடி கிளிக்// முடியலயே! ஆனாலும் நான் சரியாதான் கெஸ் பண்ணி இருப்பேன்னு தோணுது. ;)
கேசரி ரெசிபி நல்லா இருக்கு. முடியுறப்ப ட்ரை பண்றேன்.
உங்க இனிப்பான வாழ்த்துக்கள்,யெல்லோ ட்யூலிப் பொக்கே இரண்டுக்கும் நன்றி ப்ரியா! ரொம்ப சந்தோஷம், தனிப்பதிவு போட்டு வாழ்த்து சொன்னதுக்கு! :))))))
இமா & சிவா உங்கள் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி! தேடிக் கண்டுபிடிச்சு வாழ்த்து சொல்லியிருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு!
///ஸ்மைலிஸ் முன்னாடி கிளிக்// முடியலயே! /// ஆஹா..இந்த டெக்னிக்கை அறிமுகப்படுத்தின உங்களுக்கே ப்ரியா சொல்லறது தெரிலயா? நம்ப முடிலையே இமா?! ;)
//வாழ்த்த வயதில்லை மகிமா
இருந்தாலும்
வாழ்த்துக்கள்//ஐ..இன்னும் எத்தனை நாளைக்கு இப்புடியே சொல்லிட்டு இருப்பீங்க சிவா? காம்ளான் குடிச்சா சீக்கிரமா வளந்துரலாம்,இன்னும் காம்ப்ளான்தானே குடிக்கிறீங்க..கூடியவிரைவில் உங்களுக்கும் நான் வாழ்த்துச்சொல்லற மாதிரி குட் நியூஸ் சொல்லுங்க! ;)
;) ஹைலைட் பண்ணச் சொல்லி இருந்தா புடிச்சிருப்பேன். ப்ரியா 'க்ளிக்'னாங்களா, எனக்கு 'க்ளிக்' ஆகல. ;)))
மஎகிக்கு வாழ்த்து சொல்ல முடிந்ததற்கு நன்றி.எல்லா வளங்களும், வரங்களும் பெற்று நல்ல வாழ்வு தொடரட்டும்.
அவங்க பேர் கூட ம-ல ஆரம்பிச்சு கி-ல முடியும்! கரெக்டா. கண்டுபிடிக்கமுடியாதவாளுக்கு இன்னொரு க்ளூ ம-க்கும் கி-க்கும் நடுல ஒன்னுமே கிடையாது!...:))
நன்றி இமா. கரெக்ட் டா கண்டு புடிச்சிட்டீங்களே....
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சிவா. நீங்க சிங்கபூர் ல தானே இருக்கீங்க ? நாங்க கூட ஒரு 2 வருஷம் சிங்கபூர் ல இருந்தோம் சிவா.
//;) ஹைலைட் பண்ணச் சொல்லி இருந்தா புடிச்சிருப்பேன். ப்ரியா 'க்ளிக்'னாங்களா, எனக்கு 'க்ளிக்' ஆகல. ;))) //
இது தான் முதல் முறையா இந்த டெக்னிக் யூஸ் பண்ணது இமா . அதான் தப்பா சொல்லிட்டேன்.
நன்றி காமாட்சி அம்மா.
வாங்க தக்குடு... அஹா.... இப்படி எல்லாம் கூட க்ளு தரலாம்னு தெரியாம போச்சு.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தக்குடு.
கேசரியை பார்க்கும்போதே சாப்பிடனும் போலிருக்கு!
நன்றி பிரியா.... செய்து பாருங்க நல்லா இருக்கும்.