•Friday, June 10, 2011
சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெண்டு விதத்தில் செய்யலாம். அதில் oru வகை idhu.
தேவையான பொருட்கள் :
சௌ சௌ - 1
பயத்தம் பருப்பு - 1 கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் பொடி - 1 சிட்டிக்கை
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
எண்ணெய்
அரைக்க :
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் - தேவையான அளவு
செய்முறை :
சௌ சௌ- வை சின்ன சின்னதா கட் பண்ணிக்கணும்.
குக்கர் - ல பயத்தம் பருப்பு, சௌ சௌ, தக்காளி,மஞ்சள் பொடி, கொஞ்சம் உப்பு போட்டு குழைய வேக வைக்கணும்.
அரைக்க கொடுத்து உள்ளதை அரைச்சிக்கனும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வேக வைத்து இருக்கும் பருப்பை மசித்து கொட்டி, அரச்சு வச்சு irukkaradhayum கொட்டி, உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடனும்.
pachchai வாசனை போனதும் இறக்கினால் பொரிச்ச கூட்டு redi.
கூட்டு
|

4 comments:
தக்காளி போட்டு கூட்டு செய்ததில்ல ப்ரியா! நல்லா இருக்கு கூட்டு.
nice ப்ரியா நல்லா இருக்கு .
நன்றி மகி. தக்காளி போட்டு செய்து பாருங்க நல்லா இருக்கும்.
நன்றி சௌம்யா.