•Friday, June 24, 2011
சீரகம் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி - ஒரு கை அளவு
கடலை எண்ணெய்
நெய்
சீரகம் - 1 ஸ்பூன்
அரிசி - 1 கப்
உப்பு
பச்சை மிளகாய் - 4
ரைத்தா செய்ய தேவையான பொருட்கள் :
கேரட் - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கொத்துமல்லி
எண்ணெய்
கடுகு
எண்ணெய்
கடுகு
செய்முறை :
குக்கரில் எண்ணெய், நெய் கொஞ்சம் விட்டு சீரகம் போட்டு வெடிக்க விடனும்.
வெடிச்சதும் அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு வறுக்கணும். பிறகு பச்சை பட்டாணி, முந்திரி பருப்பு போட்டு வறுக்கணும்.
அரிசி களைந்து போட்டு வறுத்து அதில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு 2 விசில் விடனும்.( நான் ஒரு கப் அரிசிக்கு 2 1 /2 கப் தண்ணீர் விட்டேன் ) பாஸ்மதி அரிசி இருந்தால் அதை பயன்படுத்தலாம். எங்க வீட்டுல யாரும் பாஸ்மதி அரிசி சாப்பிட மாட்டாங்க அதனால நான் பச்சரிசி - ல தான் பண்ணேன்.
பிரஷர் போனதும் நன்றாக கலந்தால் சீரகம் ரைஸ் ரெடி.
வெங்காயம்,தக்காளி, கொத்தமல்லி பொடியாக நறுக்கி போட்டுக்கணும். கேரட் துருவி போட்டுக்கணும். உப்பு போட்டு தயிர் விட்டு கடுகு தாளித்து கொட்டினால் ரைத்தா ரெடி.
0 comments: