•Tuesday, December 20, 2011
இந்த தோசை பருப்பு, மிளகு, சீரக வாசனையுடன் ரொம்ப நல்லா இருக்கும். இதுக்கு தொட்டுக்க மிளகாய் பொடி, எண்ணெய் தான் சரியான காம்பினேஷன். தோசை மேல மொரு மொறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் உப்புமா மாதிரியே இருக்கும். சாப்பிட நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 / 2 கப்
பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 / 4 கப்
மிளகு
சீரகம்
காய்ந்த மிளகாய் - 2
அரிசி உடைசல் - 2 கப்
தயிர் - 1 / 2 கப்
உப்பு
செய்முறை :
அரிசி உடைசலை 2 முறை களைந்து, தயிர் விட்டு கலந்து வைக்கணும்.
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கணும்.
மிளகு, சீரகம் 15 நிமிஷம் ஊற வைக்கணும்.
இந்த தோசைக்கு காரத்திற்கு மிளகாயை விட மிளகு தான் அதிகம் சேர்த்துக்கனும்.
பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொர கொரப்பாக அரச்சுக்கணும்.
அரைத்த விழுதை அரிசி உடைசல் கலவையுடன் கலந்து அடை மாவு பதத்திற்கு திக்காக கரைச்சுக்கனும்.
இந்த தோசையை, தோசை கல்லில் செய்வதை விட வாணலியில் செய்தால், இன்னும் நன்றாக இருக்கும். ஒரு கரண்டி மாவு எடுத்து வாணலியில் விட்டு, சுத்தி எண்ணெய் நிறைய விட்டு, அடுப்பை சின்னதாக வைத்து, மூடி வச்சிடணும். வெந்ததும், திருப்பி போட்டு (கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், லாவகமா திருப்பி போடணும் ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால், குண்டு குண்டாக தோசை சூப்பர் ரா இருக்கும்....
பார்க்க சாதா தோசை மாதிரி இருந்தாலும் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன்.....
குறிப்பு :
அரிசில கொஞ்சமா தண்ணி தளிச்சு பிசறி வச்சிண்டு, ரவை மாதிரி மிக்சில போட்டு ஒடச்சிக்கணும். ஒன்னும் ரெண்டுமாக இல்லாம, ரொம்ப மாவாவும் இல்லாம ரவை மாதிரி ஒடச்சிக்கணும்.
இந்த அரிசி ஒடசலை வச்சு அரிசி உப்புமா, உப்புமா கொழுக்கட்டை, தவலை தோசை எல்லாம் செய்யலாம்.
15 comments:
paarthathume saapita thoondukirathu...
kurinjikathambam
நான் துளி வெந்தயம் சேர்த்துச் செய்வேன். ப்ரஷர் பேனில் வார்த்தால் கூட நன்றாக வரும்.தவலை தோசை மணமாகவும்.ருசியாகவும் இருக்கு என்பதை பார்த்தாலே தெறிகிறது.கமகமாதான். ஆமாம் நீ ஏன்
சொல்லுகிறேன் பக்கம் வருவதில்லை. நன்ராக எழுதுகிறாயம்மா.ஸந்தோஷம்.
மிகவும் அருமை! (என் துணைவி இதைப் பார்த்து செய்து விட்டார்கள்)
பகிர்விற்கு நன்றி சகோதரி! பதிவுலகில் புதியவன்.
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
அரிசி உடைசல்னா? அது எப்படி செய்யனும் ப்ரியா? சும்மா அரிசியை மிக்ஸில ஒண்ணு-ரெண்டா உடைச்சா போதுமா?இல்ல வறுத்து உடைக்கணுமா? அரைச்ச மாவு புளிக்க வேணாமா,அப்பவே சுடலாமா?
சாரி..நிறைய கேட்டுட்டேன்! ;) சூப்பரா இருக்கு தோசை..டவுட்ஸ் க்ளியர் பண்ணீங்கன்னா சீக்கிரம் சாப்ட்டுப் பார்த்துருவேன்!;)
நன்றி குறிஞ்சி.
நன்றி காமாட்சி அம்மா.... நான் வெந்தயம் சேர்த்து செய்தது இல்லை.. அடுத்த முறை செய்து பார்க்கறேன்...
ப்ரஷர் பேனில் செய்வீங்களா! தோசை திருப்ப கஷ்டமா இருக்காதா ? நான் வாணலியில் தான் செய்து இருக்கேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அண்ணே.... உங்க மனைவி உடனே செய்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.
அரிசில கொஞ்சமா தண்ணி தளிச்சு பிசறி வச்சிண்டு, ரவை மாதிரி மிக்சில போட்டு ஒடச்சிக்கணும். ஒன்னும் ரெண்டுமாக இல்லாம, ரொம்ப மாவாவும் இல்லாம ரவை மாதிரி ஒடச்சிக்கணும்.
இந்த அரிசி ஒடசலை வச்சு அரிசி உப்புமா, உப்புமா கொழுக்கட்டை, தவலை தோசை எல்லாம் செய்யலாம்.
எங்க அம்மா மிஷின்ல அரிசிய கொடுத்து ரவை ஒடசல்னு சொல்லி அரச்சு தந்துடுவாங்க. நான் எல்லாத்துக்கும் அதையே பயன்படுத்திக்குவேன்.
நீங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க நல்லா வரும். செய்து சாப்பிட்டு விட்டு பின்னூட்டம் போடுங்க மகி...
ரொம்ப பெரிய..... விளக்கம் தான். :)
இந்த மாவை புளிக்க வைக்கவே வேண்டாம்..... அரச்ச உடனே செய்துடலாம். நன்றாக இருக்கும்.
Thanks Priya! Still I have some doubts! Will mail u! ;)
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
சூப்பர் ரெசிப்பி. படங்கள் அழகா இருக்கு.
நன்றி சௌம்யா.
நன்றி வானதி.