Author: Priya ram
•Monday, April 09, 2012
எங்க வீட்டுல காரடையான் நோன்புன்னு, ஒரு நோன்பு உண்டு. அந்த நோன்புக்கு இந்த அடை செய்வாங்க.

வெல்ல அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு
வெல்லம்
காராமணி
தேங்காய்
நெய்  

அரிசி மாவு செய்முறை :

4  கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிய விட்டு,மிக்ஸியில்  araiththu, சலித்து, மாவை வறுத்து [இளம் சூடு ], சலித்து வைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த மாவில் வெல்ல அடை, உப்பு அடை, கொழுக்கட்டை எல்லாம் செய்யலாம். 


இப்போ வெல்ல அடை செய்முறைக்கு போவோம். காராமணியை வேக வைத்து வச்சுக்கணும்.


வெல்லம், ஒரு கால் கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கணும். இதை வடிகட்டணும்.


வாணலியில் வடிகட்டின வெல்ல  தண்ணீர் சேர்த்து அதனுடன் வேக வைத்த காராமணி, தேங்காய் சேர்த்து கொதிக்க விடனும்.


நல்லா கொதிக்கும் போது அரிசி மாவு சேர்த்து நன்றாக கிளறனும்.


கட்டி தட்டாமல் நன்றாக கிளறனும்.


நன்றாக சேர்ந்து வரும் போது 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறனும்.


இந்த மாதிரி மாவு கிடைக்கும்.


இந்த மாவை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வடைகளாக தட்டி,



வேக வைத்து எடுத்தால் வெல்ல அடை ரெடி.



இந்த அடையுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

உப்பு அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு
தண்ணீர்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய்
பெருங்காயம்
கொத்தமல்லி, கருவேப்பிலை
உப்பு
தேங்காய்
காராமணி

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்  தாளிக்கணும்.


பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்.


தண்ணீர் விட்டு, தேங்காய், வேக வைத்த காராமணி, உப்பு போட்டு கொதிக்க விடனும்.


கருவேப்பிலை போடணும்.

நன்றாக கொதிக்கும் போது மாவு சேர்த்து கிளறனும். கொத்தமல்லி  தூவணும்.

இந்த மாவை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வடைகளாக தட்டி வேக வைத்தால் உப்பு அடை ரெடி.


வெல்ல அடை, உப்பு அடை செய்து சாப்பிட்டு பாருங்க. சூப்பர் ரா இருக்கும்.
Author: Priya ram
•Wednesday, January 18, 2012
வீட்டுல ஒரு முறை வள்ளிக்கிழங்கு நிறைய இருந்தது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது வறுவல் பண்ணலாம்னு தோனித்து....உடனே வறுவல் பண்ணிட்டேன்.


 தேவையான பொருட்கள் :

வள்ளிக்கிழங்கு
எண்ணெய்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி

செய்முறை :

வள்ளிக்கிழங்கை தோல் நீக்கிட்டு சிப்ஸ் மாதிரி மெலிசாக சீவிக்கணும்.


வாணலியில் எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கணும்.

 

கடைசி முறை பொரிக்கும் முன்பு, பொரிச்சு வைத்திருப்பதில் உப்பு, வறட்டு மிளகாய் பொடி தூவி, அதன் மீது கடைசி முறை பொறிப்பதை போட்டு குலுக்கி கொடுத்தால் வள்ளிக்கிழங்கு வறுவல் உப்பு, காரத்துடன் தயார்.



இது நான் முதல் முறை செய்தது. கொஞ்சம் காரம் அதிகமாக போட்டு செய்துட்டேன். காரம் கம்மியாக போட்டு நேத்து திரும்பவும் செய்தேன் அந்த படம் தான் முதலில் உள்ள படம்.

குறிப்பு :

வள்ளிக்கிழங்கை சீவிய உடனே பொரிச்சிடனும்.
Author: Priya ram
•Saturday, November 12, 2011
நானும், என்னவரும் வெளில சாப்பிட போகும் போது கட்லெட் ஆர்டர் பண்ணால் சாப்பிடவே மாட்டார்....  கட்லெட் வெளில சாப்பிடவே அவருக்கு புடிக்கலை. வீட்டுல நான் செய்து தரேன்னு சொல்லி இருந்தேன்.....

நானும், என்னோட அக்காவும் சின்னதுல கட்லெட் செய்து இருக்கோம். வெறும் உருளைகிழங்கு, வெந்நீரில் நனைச்ச பிரட் வச்சு செய்து இருக்கோம்.

தொலைக்காட்சில ஒரு தடவை ஈஸியாக   கட்லெட் செய்ய சொல்லி கொடுத்தாங்க. அதை பார்த்து விட்டு, அடுத்த நாளே ட்ரை பண்ணேன். ரொம்ப நல்லா வந்தது.... என்னவருக்கும் புடிச்சு இருந்தது....

தேவையான பொருட்கள் :

கேரட் - 1
உருளைகிழங்கு - 2
பச்சை பட்டாணி
கொத்தமல்லி
உப்பு
பிரட் கிரம்ஸ்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய்

செய்முறை :

உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி தனி தனியாக வேக வச்சுக்கணும்.


 வெந்த  காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் பொடி போட்டு நன்றாக பிசையணும்.


பிசைந்து வச்சு இருக்கறதை வடை மாதிரி தட்டி பிரட் கிரம்ஸ் -ல்  பிரட்டி , தவாவில் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக பொறித்து எடுத்தால் கட்லெட் ரெடி...


கட்லெட் கூட டொமேடோ கெட்சப் தொட்டுண்டு சாப்பிடலாம்.


Author: Priya ram
•Sunday, October 09, 2011
என்னவருக்கு பஜ்ஜினா ரொம்ப புடிக்கும். ஒரு சண்டே சாயந்திரம் காய் எல்லாம் கட் பண்ணி கொடுத்து,  பஜ்ஜி செய்து தரச்  சொல்லி கேட்டார். (காய் கட்பண்ணி வச்சுட்டா மறுப்பு சொல்லாம செய்து தந்து தானே ஆகணும். குலோப் ஜாமூன் செய்ய நாள் தள்ளின மாதிரி,  பஜ்ஜி செய்து தரவும் நாள் தள்ள போறேன்னு தான் காய் கட் பண்ணி தந்துட்டார் ). வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு பஜ்ஜி செய்து தந்தேன். என்னவருக்கு தக்காளி பஜ்ஜினா ரொம்ப புடிக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1  கப்
அரிசி மாவு - 1/4  கப்
வறட்டு மிளகாய் பொடி
உப்பு
பெருங்காயம்
வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு - 2 



மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு, கொஞ்சம் திக்கா தோசை மாவு மாதிரி கரைச்சுக்கனும்.

என்னவர் கட் பண்ணி கொடுத்த காய்கள். தக்காளி, வெங்காயம், உருளை கிழங்கு, வட்ட வட்டமாக கொஞ்சம் திக்காக கட் பண்ணி வச்சுக்கணும்.

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் பஜ்ஜி ரெடி.


வெங்காயம், உருளைகிழங்கு பஜ்ஜி.


தக்காளி பஜ்ஜி.


இதே மாதிரி பீர்க்கங்காய், கத்தரிக்காய் பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

குறிப்பு : அது என்ன.... சண்டே தான் பஜ்ஜி செய்து சாப்பிடனுமானு நீங்க கேட்கறது தெரியறது.... என்ன பண்ணறது.... மத்த நாள் எல்லாம் எங்க வீட்டு ரங்கமணி   ஆபீஸ் - ல இருந்து வரவே நைட் ஆகிடறது. பஜ்ஜி சாயந்தர நேரத்தில் சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அதான் எங்க வீட்டுல பஜ்ஜினா சண்டே தான். அம்மா வீட்டுல பஜ்ஜி செய்தா கூடவே கேசரியும் செய்துடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.  
அட....  இன்னிக்கும் சண்டே.... எல்லோரும் உங்களுக்கு புடிச்ச பஜ்ஜி செய்து சாப்பிடுங்க..... :)



Author: Priya ram
•Sunday, July 03, 2011


தேன்குழல்  செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2  கப்
உளுத்தம் மாவு - 2  கைபிடி
வெண்ணெய்
பெருங்காயம்
சீரகம்
உப்பு




செய்முறை :
உளுத்தம் மாவு செய்ய உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்தால் உளுத்தம் மாவு கிடைக்கும். மேலே உள்ள அனைத்தும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் தேன்குழல் தட்டு போட்டு மிதமாக காய்ந்த எண்ணையில் பொறித்து எடுத்தால் தேன்குழல் ரெடி.

குறிப்பு :

முறுக்கு குழலில் 5  ஓட்டை இருக்குமாறு ஒரு தட்டு இருக்கும் அது தான் தேன்குழல் தட்டு.


Author: Priya ram
•Friday, July 01, 2011

ரிப்பன் பகோடா செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2  கப்
கடலை மாவு - 1  கப்
வெண்ணெய் - 1  ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
தண்ணீர்




செய்முறை :

மேலே சொன்ன எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து, குழலில் ரிப்பன் பகோடா தட்டு போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய ரிப்பன் பகோடா தயார்.





Author: Priya ram
•Sunday, June 12, 2011



போண்டா செய்ய தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1  கப்
மிளகு
உப்பு
அரிசி மாவு
தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது

சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

தேங்காய்,
பொட்டுகடலை
பச்சை மிளகாய்
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை





செய்முறை :

உளுத்தம் பருப்பு 1 /2  மணி நேரம் ஊற வச்சு தண்ணி கொஞ்சமா விட்டு அரச்சுக்கணும்.
மாவுல கொஞ்சமா அரிசி மாவு, உப்பு, மிளகு, சின்ன சின்னதாய் நறுக்கிய தேங்காய் போட்டு நன்றாக பிசையனும்.
எண்ணெய் காய வச்சு அதில் உருட்டி போட்டு பொறித்து எடுத்தால்  போண்டா தயார்.

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து  தனியா எடுத்துக்கணும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சட்னி ரெடி.





Author: Priya ram
•Wednesday, June 08, 2011


ஓமப்பொடி செய்ய தேவையான பொருட்கள் :

ஓமம் - 1  ஸ்பூன்
கடலை மாவு - 2  கப்
அரிசி மாவு - 1  கப்
உப்பு
பெருங்காயம்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்






செய்முறை :
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சமாக தண்ணீர்  விட்டு பிசைந்து கொள்ளவும். குழலில் ஓமப்பொடி  தட்டு போட்டு பிசைந்த  மாவை போட்டு  எண்ணையில் பிழிந்து பொறித்து எடுத்தால் ஓமப்பொடி  தயார்.
Related Posts Plugin for WordPress, Blogger...