Author: Priya ram
•Thursday, July 14, 2011
ஆர்கண்டி பூக்களை நான் ஒரு பதிவில் போட்டு இருக்கேன். 
அந்த பூக்களை எப்படி செய்வதுனு இந்த பதிவில் போடுகிறேன். 
தேவையான பொருட்கள் :
ஆர்கண்டி துணி - 1 மீட்டர் ( 25  ரூபாய் தான் இது. இந்த 1  மீட்டரில் நிறைய பூக்கள் செய்யலாம் )
கத்திரிக்கோல் 
அலுமினிய கம்பி (பெரிய சைஸ்-ல கிடைக்கும் ஒரு கம்பியை  ரெண்டா கட் பண்ணி ரெண்டு பூ செய்ய யூஸ் பண்ணிக்கலாம் )
கட்டர்
அர்டிபிசியல் இலை
பஞ்சு
பெவிகால்
பச்சை ப்லோரல் டேப்
துணி கலர்ல இருக்க நூல்
இன்ச் டேப்




பஞ்சு, பெவிகால், இன்ச் டேப்  போட்டோ -ல வைக்க மறந்துட்டேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
செய்முறை :
 நீட்டா இருக்க கம்பியை இந்த மாதிரி ரெண்டா கட் பண்ணி தேவையான எண்ணிக்கை எடுத்துக்கணும்.



துணியை இன்ச் டேப் வச்சு நீல வாட்டில் 7cm , அகலம் வாட்டில் 7cm  
இருக்க மாதிரி லைன் போட்டுக்கணும். இதுல ஒரு ஒரு கட்டமும் 
 7cm  * 7cm  இருக்கு.




கத்திரிகோல் வச்சு துணியை  கட் பண்ணி இந்த மாதிரி சின்ன சின்ன துண்டா எடுத்துக்கணும். இப்போ நான் 5  பூவுக்கு ரெண்டு லைன் தான் கட் பண்ணி எடுத்து இருக்கேன்.



இந்த மாதிரி ஒரு துணியை எடுத்துக்கணும். 


அதை இந்த மாதிரி ரெண்டு பக்கமும் பாதியா மடிச்சுக்கணும்.


அப்புறம் மேல இருந்து கீழ கரெக்ட் டா பாதியா மடிச்சுக்கணும்.



மடிச்ச நுனியை கீழ left hand கட்டை விரலால் அழுந்த புடிச்சு கிட்டு மேல ரெண்டு முனையையும் கம்பியால் வெளி பக்கம் உருட்டி விடனும்.


உருட்டி விட்டதும் பின் பக்கம் இப்படி தான் இருக்கும் துணி.



உருட்டிய பக்கத்தை பின் பக்கமாக வச்சு கிட்டு left hand கட்டை விரலால் கிழே நுனியை புடிச்சு கிட்டு, ரைட் hand கட்டை விரலால் துணியின் நடுவில் அழுத்தி கீழே நுனியை சுத்தணும்.  துணியோட நடுவில் கட்டை விரல் அழுத்தமும், கீழே சுத்தி இருப்பதும்  படத்தை பார்த்தா புரியும்.



இந்த மாதிரி நிறைய இதழ்கள் செய்து வச்சுக்கணும். ஒரு பூவுக்கு குறைந்தது  15  இதழ்கள் வச்சா தான் நல்லா இருக்கும்.



கம்பியோட ஒரு முனைல பெவிகால் தடவி பஞ்சு கொஞ்சம் எடுத்து ஒட்டிக்கணும். அப்புறம் அது மேல ஒரு துண்டு துணியை மூடி சுத்தி நூல் வச்சு இருக்க கட்டிடணும். (பூ தொடுப்பது போல் கட்டனும். )



பூ முழுக்க பண்ணற வரை நூலை கட் பண்ணிக்காம ஒரு ஒரு இதழாக வச்சு பூ தொடுப்பது போல் கட்டிகிட்டே வரணும். இதழ் வச்சு கட்டும் முன் இதழ் கீழ உருட்டினதை கொஞ்சம் லூஸ் பண்ணிக்கலாம். (அப்போ தான் கீழ ரொம்ப பெரிய உருண்டையா தெரியாது )


இதழ் வைக்கும் போது பக்கத்துல பக்கத்துல காலியா இருக்க இடம் பார்த்து வைக்கணும். வச்ச பக்கமே நிறைய இதழ் வைக்க கூடாது. பார்த்து வைக்கணும்.  



எல்லா இதழும் வச்சதும் இந்த மாதிரி அழகான பூ கிடைச்சிடும். நூலால இருக்க கட்டிட்டு நூலை கட் பண்ணிடலாம்.



பூவோட கீழ இப்படி தான் இருக்கும். நிறைய உருண்டையா இல்லாம இருக்கும்.



பச்சை ப்லோரல் டேப் ல பசை  இருக்கும். அப்படியே வச்சு டைட்டா சுத்தினா காம்பு ரெடி ஆகிடும்.

காம்புடன் பூ ரெடி.



ஆர்டிபிசியல் இலையில் ஒரு ஓட்டை இருக்கும். இந்த பூவின் காம்பை  அந்த ஓட்டைல விட்டு எடுத்தா இலையும் செட் ஆகிடும்.


நிறைய பூ செய்து இந்த மாதிரி பூங்கொத்து செய்யலாம்.



எங்க வீட்டுல இந்த மாதிரி சட்டத்துல பூ இருக்க மாதிரி முன்னா.......டி வாங்கி இருக்காங்க. பசங்க விளையாடி பூவெல்லாம் எங்கயோ தூக்கி போட்டு இருக்காங்க. அதனால வெறும் சட்டம் மட்டும் இருந்தது. இந்த பூக்கள் செய்து, அலுமினியம் பாயில் பேப்பர் சுத்தி வர கொழல்- ல கிப்ட் பேப்பர் சுத்தி பிக்ஸ் பண்ணி அதுல பூ போட்டு ஹால்ல மாட்டி இருக்கேன்.


எங்க மாமனார் இதை பார்த்து விட்டு இன்னொரு சட்டம் வாங்கி தரேன். இன்னும் ஒன்னு பண்ணிடுன்னு சொல்லிட்டு இருக்கார்.எங்க நாத்தனார் எனக்கு 30  பூ பண்ணி கொடு நான் நிறைய பாட் வச்சு இருக்கேன், அதுல எல்லாம் போட்டுக்கறேன்னு சொன்னாங்க.  நான் முதலில் பண்ணது லைட் பிங்க் கலர். இப்போ ரெட் கலர். அதை விட எனக்கு இது ரொம்ப புடிச்சு இருக்கு.
This entry was posted on Thursday, July 14, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On July 15, 2011 at 9:59 AM , Mahi said...

ரொம்ப அழகா இருக்கு ப்ரியா சிவப்பு ரோஜாக்கள்! நிஜ பூக்கள் போலவே இருக்கு.

தெளிவா செய்முறைய சொல்லிருக்கீங்க,போட்டோஸும் சூப்பரா இருக்கு!

தக்குடு வந்து இந்தப் பூவையே தங்கமணிகளுக்கு குடுத்து ஐஸ் வைச்சுடுவோம்,பணமே செலவாகாதுன்னு சொல்லப்போறார்!;) ;)

 
On July 15, 2011 at 1:41 PM , இமா க்றிஸ் said...

எப்பவும் நான் சொல்றதுக்கு எதுவும் மிச்சம் வைக்காம மகி முன்னாடியே வந்து சொல்லிடறாங்க ப்ரியா. அதே கமண்ட்ல முதல் 2 வரியையும் திரும்ப படிச்சுக்கங்க. ;)

 
On July 16, 2011 at 8:18 PM , Menaga Sathia said...

மகி ப்ளாக் மூலம் உங்கள் ப்ளாக்கிற்க்கு வந்தேன்.பூ செய்வடஹி ரொம்ப அழகா விளக்கமா சொல்லிருக்கீங்க ப்ரியா...செய்து பார்க்கனும் ஆசை வந்துடுச்சு...பாராட்டுக்கள்,பூ கலரும் அழகா இருக்கு..

 
On July 19, 2011 at 11:33 AM , Priya ram said...

நன்றி மகி..... தக்குடு வந்து சொன்னாலும் இந்த பூக்களை தலையில் வச்சுக்க முடியாது.... :)
ஐஸ் வைக்க வேணும்னா கொடுக்கலாம்.
தெளிவாக விளக்கம் இருக்கனும்னே நிறைய போடோஸ் எடுத்து போட்டேன் மகி...

 
On July 19, 2011 at 11:34 AM , Priya ram said...

நன்றி இமா.

 
On July 19, 2011 at 11:38 AM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேனகா... இதே துணில பேபி பிங்க் கலர் பூ கூட பண்ணி இருந்தேன்.. ஆனால் ரெட் கலர் ல ரொம்ப அழகா வந்தது. ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.....

 
On August 24, 2011 at 2:10 PM , காமாட்சி said...

சிகப்பு ரோஜா அம்மனுக்கு அர்ச்சனை பண்ணலாம்போல இருக்கு. ஆர்கண்டியின் அருமையான, மலர்கள்.

 
On January 9, 2014 at 7:03 AM , ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

 
Related Posts Plugin for WordPress, Blogger...