மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வாசலில் பெரிய கோலம் போடுவாங்க.. எங்க வீட்டில் ராம் ரொம்ப விரும்பி கேட்டும் என்னால போட முடியலை... எங்க அக்கா ரொம்ப அழகா கோலம் போடுவா... சாதாரணமா வாசலில் போய் நின்னுகிட்டு பெரிய பெரிய கோலம் எல்லாம் அசால்டா போட்டு விட்டு வருவா.... நான் அப்படி இல்லை... கோல நோட்டு இல்லாம வெளில போகவே மாட்டேன்.... :)
பொங்கல் நேரத்திலாவது பெரிய கோலம் போடலாம்னு நெட்டில் கோலம் தேட ஆரம்பித்தேன்.. அதை பார்த்து விட்டு, எங்க மாமியார் அவங்க கிட்ட இருந்த பழைய கோல நோட், அவள் விகடன், மங்கையர் மலர் புக் உடன் வந்த இணைப்பு கோல புக், பேப்பரில் வரைந்து வைத்த கோலம்னு நிறைய தந்தாங்க..... அதை எல்லாம் எடுத்து, எனக்கு போட வந்த கோலம் வரை தெளிவா என்னோட நோட்டில் போட்டு வைத்து இருக்கேன்.... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.... உங்க வீட்டு வாசலில் போட கூட இவை பயன்படலாம்.....
நிறைய கோலம் இருப்பதால் கோலங்கள் -1,2,3,4,.... என்று பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன்.... என்ன சொல்லறீங்க ? ஓகே தானே ?
15 புள்ளி கோலங்கள் :-
15 புள்ளி 5 வரிசை, நேர்ப்புள்ளி, 5 இல் நிறுத்தவும்..
15 புள்ளி சந்துப்புள்ளி, 8 இல் நிறுத்தவும்..
15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 இல் நிறுத்தவும்..
15 புள்ளி 8 வரை , 6 பக்கமும் 3,4,5 புள்ளிகள், சந்துப்புள்ளி
15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்..
15 புள்ளி, சந்துப்புள்ளி, 6 - இல் நிறுத்தவும்...
15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 - இல் நிறுத்தவும்...
15 புள்ளி, நேர்ப்புள்ளி, 1 - இல் நிறுத்தவும்...
15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்....
15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்...
15 புள்ளி கோலங்கள் இன்னிக்கு பகிர்ந்து இருக்கேன்....