Author: Priya ram
•Thursday, October 04, 2012
இந்த கோவில் பெங்களூர்ல நாங்க பார்த்து இருக்கோம். ரொம்ப அருமையா இருக்கும்... அதே கோவில்... இங்க சென்னைல ரொம்ப அழகா இருக்குனு.. தெரிஞ்சவங்க சொன்னதை வைத்து, நானும் என் கணவரும் ஒரு வார இறுதியில் போய் பார்த்தோம். ரொம்ப அழகா கட்டி இருக்காங்க... அங்க போட்டோ எடுக்க எந்த தடையும் இல்லைன்னு சொன்னதும், போட்டோ எடுத்து தள்ளிட்டோம்... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு...

இந்த கோவில் சோழிங்கநல்லூர் கிட்ட இருக்கு.... இது தான் கோவிலின் வெளி வீவ்...


இது உள் அமைப்பு...


கோவில் நேரம்


கோவில் உள்ளே நுழையும் போதே இந்த பசு, கன்று சிலை தான் வரவேற்கிறது.....





கோவில் சுற்றி, சுவற்றில் வரையப் பட்டு இருக்கும் கிருஷ்ண லீலைகள்.

வசுதேவருக்கும்,தேவகிக்கும் - கிருஷ்ணர் மதுராவில் பிறந்தது...


கிருஷ்ணரை மதுராவிலிருந்து கோகுலம் எடுத்து செல்கிறார் வசுதேவர்...


பூதகி எனும் அரக்கியை, கண்ணன் அழித்தது....


நண்பர்களுடன் வெண்ணெய் திருடியது...


யசோதா கண்ணனை உரலில் கட்டியது...


யசோதாவிற்கு உலகத்தை வாயில் காட்டியது....


காளிங்க  நர்த்தனம்....


கோபியர்கள் துணியை  எடுத்துக்கொண்டு, கண்ணன் தர மறுத்தது....


கண்ணனை யசோதா கட்டிப்போட்டது...


கோவர்தணகிரி மலையை தனது சுண்டுவிரலால் தூக்கியது...


கோவில் சுவாமிகள் வீவ்...


ராதை, கிருஷ்ணர்,ராதையின் தோழிகள்....


ஸ்ரீ நிதை,  ஸ்ரீ குரு...


அந்த கோவிலை சுற்றும் போது  ஆனந்தமாக  இருந்தது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.....

 கோவில் இருக்கும் இடத்தை சரியாக தெரிந்து கொள்ள இங்கே  பாருங்கள்.....
கண்ணனின் லீலைகள் பார்க்க பார்க்க, கேட்க கேட்க ஆனந்தம் தான்....

Author: Priya ram
•Monday, May 23, 2011
நானும் என்னோட கணவரும்  ஒரு வார இறுதியில் கோவளம் பீச்க்கு போனோம்.  போற வழி  எல்லாம் ஒரே மாங்காய் தோப்பு. மாங்காய் கொத்து கொத்தா கீழயே தொங்கிட்டு இருந்தது. அங்க இருந்த ஆட்கள்  பறிக்க விடலை. அதனால் போட்டோ மட்டும் எடுத்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...