Author: Priya ram
•Monday, December 03, 2012

மோர் குழம்பு செய்வது ரொம்ப ஈஸி.... எப்பவும் சொல்லற மாதிரி சொல்லி ஆரம்பிக்கறாங்க பிரியா -ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியறது.... நிஜமாகவே இது ரொம்ப ஈஸி தான்.... போஸ்ட் முடிவுல நீங்களே சொல்லுவீங்க... (தயவு செய்து சொல்லிடுங்க.... சொல்றவங்களுக்கு ஒரு  கப் மோர் குழம்பு பார்சல்.... )


தேவையான பொருட்கள் :

தயிர் - 1 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க :

கருவேப்பிலை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்  - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்
மணத்தக்காளி வத்தல் -  2  டேபிள்ஸ்பூன்

அரைக்க :

அரிசி - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3  (இல்லைனா காய்ந்த மிளகாயும் போடலாம் )
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு (சின்னதாக)
துருவிய தேங்காய் - ஒரு கப்

செய்முறை :

அரைக்க உள்ளவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்....


ஊற வைத்ததை  கொரகொரப்பாக அரைக்கவும்.... 


அரைத்த விழுதை மோரில் கலந்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் ஏற்றவும்.



நன்றாக கிளறவும்....(இல்லையென்றால் அடி பிடித்துவிடும்)

நுரைத்து கொண்டு வந்ததும் இறக்கி விடவும்...


தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு  பெருங்காயம், வெந்தயம், மணத்தக்காளி வத்தல் தாளித்து மோர் குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி கிளறவும்....


மோர் குழம்பு ரெடி.... 



கல்சட்டியில் குழம்பு செய்தால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு, எங்க வீடுகளில் கல்சட்டியில்  செய்வோம்... இதில் இன்னும் ஒரு பயனும் இருக்கு.. ஒரு முறை கொஞ்சமாக கொதிக்கும் போதே அடுப்பை அனைத்து விடலாம்... கல்சட்டி சூட்டிலேயே மீதி கொதித்து குழம்பு சுண்டி வந்துவிடும்...
மோர்குழம்பு செய்து பார்த்து விட்டு சொல்லுங்க..

அரைக்க ஊறவைப்பதில், அரிசி கொஞ்சமாக சேர்த்தால் போதும்... கொழம்பு திக்காக வருவதற்கு தான் இதை சேர்க்கறது...

மணத்தக்காளி வத்தல் கூட அதிகமாக சேர்த்தால், கசப்பு தெரியும்...


மணத்தக்காளி வத்தலுக்கு பதில் வெண்டைக்காய், வெள்ளை பூசணிக்காய் இப்படி வேற காய்களும் சேர்த்து செய்யலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...