Author: Priya ram
•Monday, December 03, 2012

மோர் குழம்பு செய்வது ரொம்ப ஈஸி.... எப்பவும் சொல்லற மாதிரி சொல்லி ஆரம்பிக்கறாங்க பிரியா -ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியறது.... நிஜமாகவே இது ரொம்ப ஈஸி தான்.... போஸ்ட் முடிவுல நீங்களே சொல்லுவீங்க... (தயவு செய்து சொல்லிடுங்க.... சொல்றவங்களுக்கு ஒரு  கப் மோர் குழம்பு பார்சல்.... )


தேவையான பொருட்கள் :

தயிர் - 1 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க :

கருவேப்பிலை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்  - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்
மணத்தக்காளி வத்தல் -  2  டேபிள்ஸ்பூன்

அரைக்க :

அரிசி - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3  (இல்லைனா காய்ந்த மிளகாயும் போடலாம் )
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு (சின்னதாக)
துருவிய தேங்காய் - ஒரு கப்

செய்முறை :

அரைக்க உள்ளவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்....


ஊற வைத்ததை  கொரகொரப்பாக அரைக்கவும்.... 


அரைத்த விழுதை மோரில் கலந்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் ஏற்றவும்.



நன்றாக கிளறவும்....(இல்லையென்றால் அடி பிடித்துவிடும்)

நுரைத்து கொண்டு வந்ததும் இறக்கி விடவும்...


தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு  பெருங்காயம், வெந்தயம், மணத்தக்காளி வத்தல் தாளித்து மோர் குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி கிளறவும்....


மோர் குழம்பு ரெடி.... 



கல்சட்டியில் குழம்பு செய்தால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு, எங்க வீடுகளில் கல்சட்டியில்  செய்வோம்... இதில் இன்னும் ஒரு பயனும் இருக்கு.. ஒரு முறை கொஞ்சமாக கொதிக்கும் போதே அடுப்பை அனைத்து விடலாம்... கல்சட்டி சூட்டிலேயே மீதி கொதித்து குழம்பு சுண்டி வந்துவிடும்...
மோர்குழம்பு செய்து பார்த்து விட்டு சொல்லுங்க..

அரைக்க ஊறவைப்பதில், அரிசி கொஞ்சமாக சேர்த்தால் போதும்... கொழம்பு திக்காக வருவதற்கு தான் இதை சேர்க்கறது...

மணத்தக்காளி வத்தல் கூட அதிகமாக சேர்த்தால், கசப்பு தெரியும்...


மணத்தக்காளி வத்தலுக்கு பதில் வெண்டைக்காய், வெள்ளை பூசணிக்காய் இப்படி வேற காய்களும் சேர்த்து செய்யலாம்.

This entry was posted on Monday, December 03, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On December 3, 2012 at 9:38 AM , Mahi said...

Different recipe to me...shall try someday!
Kal chatti looks cute Priya! Pls. Parcel me the kuzhambu with kalchatti! :)

 
On December 3, 2012 at 5:10 PM , priyasaki said...

உண்மையிலே ஈசிதான் ப்ரியா.இங்கு ஒவ்வொருநாளும் வைத்தாலும் ஓ.கே தான். மணத்தக்காளி இதுவரை செய்யவில்லை.செய்துடவேண்டியதுதான். கல்சட்டி நன்றாக இருக்கு.

 
On December 3, 2012 at 8:13 PM , Priya ram said...

நன்றி மகி.... மோர்குழம்பு ட்ரை பண்ணி பாருங்க.... சூப்பர் ரா இருக்கும்.... ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும்....பருப்பு சாதத்துக்கு மோர்குழம்பு தொட்டுண்டு சாப்பிட்டா கூட நல்லா இருக்கும்... மோர்குழம்பு பார்சல் அனுப்பிட்டேன்... கல் சட்டியும் அனுப்பி இருக்கேன்... ரொம்ப வெயிட் டா இருக்கும்.... பார்த்து தூக்குங்க.... :)

 
On December 3, 2012 at 8:21 PM , Priya ram said...

நன்றி ப்ரியசகி, செய்வது ரொம்ப ஈஸி தான்.... செய்து பாருங்க... கல் சட்டி எங்க மாமியார் காலத்துது.... நிறைய பழைய பொருட்கள் வீட்டில் இருக்கு.... கல் சட்டி, மண் சட்டி, வெண்கல உருளி, வெண்கல பானை இப்படி நிறைய இருக்கு...

 
On December 3, 2012 at 8:23 PM , Priya ram said...

மணத்தக்காளி வயத்து புண் ஆத்தும்... ரொம்ப நல்லது... எங்க வீட்டில் நிறைய சமையலில் சேர்ப்போம்....

 
On December 3, 2012 at 8:31 PM , திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்த்திடுவோம்... நன்றி...

 
On December 3, 2012 at 10:04 PM , Menaga Sathia said...

ரொம்ப பிடித்த குழம்புன்னா அது மோர் குழம்புதான்,அருமை....

 
On December 6, 2012 at 2:10 PM , Sri's Mehandi Designs said...

mmm.... mouth watering...

 
On December 6, 2012 at 6:56 PM , Menaga Sathia said...

Priya,pls check this link for pressure cooker method cake....
http://sashiga.blogspot.fr/2012/05/eggless-carrot-cake-pressure-cooker.html

 
On December 7, 2012 at 4:32 PM , இராஜராஜேஸ்வரி said...

ரொம்ப ஈஸியான ருசியான மோர்குழம்பு பதிவுக்குப் பாராட்டுக்கள்..

 
On December 8, 2012 at 11:16 PM , RajalakshmiParamasivam said...

பிரியா,
நான் மோர்குழம்பு ப்ரியை .மோர்குழம்பை கல் சட்டியில் பார்த்ததும்
உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது .
செய்முறை விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது.
பாராட்டுக்கள் .

ராஜி

 
On December 17, 2012 at 1:26 PM , Priya ram said...

நன்றி தனபாலன் சார்.உங்க மனைவியை செய்து பார்த்து விட்டு சொல்ல சொல்லுங்க....

 
On December 17, 2012 at 1:29 PM , Priya ram said...

நன்றி மேனகா...உங்க காரட் கேக் பார்த்து விட்டேன்... செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..

 
On December 17, 2012 at 1:32 PM , Priya ram said...

நன்றி சௌம்யா....

 
On December 17, 2012 at 1:40 PM , Priya ram said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜலக்ஷ்மி மேடம்... எனக்கும் மோர் குழம்பு என்றால் ரொம்ப ரொம்ப புடிக்கும்....

 
On December 17, 2012 at 1:58 PM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி மேடம்...

 
Related Posts Plugin for WordPress, Blogger...