•Friday, October 26, 2012
நவராத்திரி முடிஞ்சு போச்சு... எங்க வீட்டு நவராத்திரி போடோஸ்.... உங்களுக்காக...
எங்க வீட்டுல 5 படிக்கட்டு பொம்மை வைத்தோம்....
முதல் ரெண்டு படிக்கட்டு... மரப்பாச்சி பொம்மை கொலுவில் வைக்கணும்...
ரெண்டாவது, மூன்றாவது படிக்கட்டு... இதில் தசாவதாரம் இருக்கு...
நான்காவது, ஐந்தாவது படிக்கட்டு...
நான்காவது படிக்கட்டில் இருக்கும் இந்த பொம்மைகள் கொண்டப்பள்ளி பொம்மைகள்... மர பொம்மைகள்...
கல்யாண செட்....
செட்டியார் இரும்பு பாத்திரக்கடை... இதில் குட்டி குட்டி அடுப்பு, தவா, அரிவாள்மனை, வாணலி, முறம் எல்லாம் இருக்கு.
மாக்கல் பொம்மை... இதில் அம்மி, குழவி, உரல், இட்லி தட்டு, விளக்கு எல்லாம் இருக்கு...

செட்டியார்.... பழம் மற்றும் காய் கடை...
செட்டியார் இரும்பு பாத்திரக்கடை... இதில் குட்டி குட்டி அடுப்பு, தவா, அரிவாள்மனை, வாணலி, முறம் எல்லாம் இருக்கு.
மாக்கல் பொம்மை... இதில் அம்மி, குழவி, உரல், இட்லி தட்டு, விளக்கு எல்லாம் இருக்கு...
கொலு, ரொம்ப வருஷமா எங்க வீடுகளில் வைக்கறது... ஒவ்வொரு வருஷமும் புது பொம்மை எதாவது வாங்குவோம்... கல்யாணம் ஆகி வரும்போது, அம்மா வீட்டில் இருந்து கொஞ்சம் பொம்மை தருவாங்க... இப்படி நிறைய பொம்மை சேர்ந்து விடும்.. இந்த மாக்கல் பொம்மை, இரும்பு பொம்மை,மற்றும் சில பொம்மை எல்லாம் எங்க அம்மா வீட்டில் எனக்கு தந்தது... இது எல்லாம் எங்க பாட்டி காலத்து பொம்மை...
என் கணவருக்கு பார்க் வைப்பது ரொம்ப புடிக்கும்.. இந்த தடவை வைக்க முடியலை... அடுத்த தடவை கண்டிப்பாக வைப்போம்... கொலுவை பார்த்து விட்டு ஒரு பாட்டு பாடிட்டு போங்க.... கேட்கறதுக்கு நான் ரெடி.... பாடறதுக்கு நீங்க ரெடியா ????... :)
கொலு
|
6 comments:
ஆஹா... அருமையா இருங்குங்க...
நன்றி...
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி...
நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி...
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்...
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்...
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது...?
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது...?
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை...
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை...
வாராது போவாயோ வாசுதேவனே...
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே...
ஜெய்..முகுந்தா முகுந்தா..
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...
வரம் தா... வரம் தா... பிருந்தாவனம் தா வனம் தா...
பாடல் பாடியது என் பொண்ணு...
Romba azhakaa irukku priya! Ella bommaikalum cute-a irukku!
Enakku patellaam paada theriyaathu, neengale enakkaaga oru paattu paadirungo, please? ;)
பாடல் கேட்க ரொம்ப இனிமையா இருந்தது... தனபாலன் சார்... உங்க பொண்ணுக்கு நன்றி சொல்லிடுங்க...
நன்றி மகி....இந்த முறை கொலு முடிந்த பிறகு போட்டோ போட்டதால்... பாட்டு படவில்லை என்றாலும் பரவா இல்லை... அடுத்த முறை கண்டிப்பா பாடனும்...
ஹலோ ப்ரியா!
கொலு ரொம்ப நன்றாக இருக்கு. செட்டியாரின் இரும்புப் பாத்திரக் கடை நல்ல யோசனை. அடுத்த கொலுவுக்கு நானும் வாங்கி வைத்து விடுகிறேன். ஐடியாவுக்கு நன்றி.
எங்கள் வீட்டு கொலுவையும் பாருங்களேன். இணைப்பு:
http://wp.me/p244Wx-ny
என்னுடைய முதல் கதையையும் போட்டிருக்கிறேன். இணைப்பு:http://wp.me/p244Wx-mF