•Wednesday, October 17, 2012
அம்மா செய்து தந்த சில உணவு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது... ஸ்வீட் பணியாரம் செய்வது பற்றிய குறிப்பை சீக்கிரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக சொல்லி இருந்தேன்.... இந்த பணியாரம் போன வார இறுதியில் தான் செய்தேன்.... இதற்கான செய்முறை ரொம்ப ஈஸி தான்...நீங்களும் முயற்சித்து பாருங்கள்...
தேவையானவை :
கோதுமைமாவு - 1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
ஏலக்காய்
செய்முறை :
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து கல் இல்லாமல் வடிகட்டவும்.
கோதுமைமாவு, மைதா மாவு, அரிசி மாவு ஏலக்காய் எல்லாம் போட்டு வெல்ல தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்...
கரைத்த மாவை குழிபணியாரம் கல்லில் விட்டு, எண்ணெய் கொஞ்சம் அதிகம் விட்டு வேக வைத்து....
திருப்பி போட்டு (இதை திருப்புவதற்காக ஒரு கம்பி தந்து இருக்காங்க.... ஆனால் நான் ஸ்பூன் வைத்தே திருப்பி விடுவேன்.... அது தான் எனக்கு ஈஸியாக இருக்கு ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்...
ஸ்வீட் பணியாரம் ரெடி.
எனக்கு தமிழ் குடும்பம் மூலமாக 2009 இல் ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க.... அவங்க கூட இதுவரை பார்க்காமல் பேசிகிட்டே நல்ல தோழிகளான நாங்க.... நேத்து சென்னையில் சந்தித்து கொண்டோம்... உங்க எல்லோருக்கும் அதற்காக தான் இந்த ஸ்வீட் ... எடுத்துக்கோங்க.. இந்த இனிப்பு மாதிரியே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.... ஒரு தோழியை சந்தித்ததில்.... :)
அந்த தோழி வேற யாரும் இல்லைங்கோ... நம்ம மகி.... தானுங்கோ...

sweets
|
7 comments:
குறிப்பிற்கு நன்றி...
கொஞ்சம் அதிகம் வெந்து விட்டது போலே...
பணியாரம் அருமை..சிம்பிளா இருக்கு ரெசிப்பி!
ப்ரியா, நிஜமாவே சென்னையில் நான் இருந்த 2-3 மணி நேரங்களும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்களை சந்திச்சதில் ரொம்ப மகிழ்ச்சி..நம்ம போட்டோஸை ரிலீஸ் பண்ணிருவோமா? என்ன சொல்றீங்க?! ;) :)
நன்றி தனபாலன் சார்.... கரெக்ட் டா வெந்து இருந்தது... சாயந்திரம் செய்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்...
நன்றி மகி... எனக்கும் உங்க கூட ஸ்பென்ட் பண்ண அந்த ஒரு மணி நேரம் ரொம்ப நல்லா இருந்தது... நீண்ட நாள் பிரிந்து இருந்த தோழியை பார்த்து பேசுவது போலவே இருந்தது.... புதுசாக பார்ப்பது போலவே இல்லை...
போட்டோவை இப்போ வெளியிட வேண்டாம் மகி... கண்ணு பட்டு விடும்... ;):)
பிரியா, மகியோட சந்திப்பா. என்னுடைய கதைக்கு பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி. அப்படியே என் ப்ளாகில் FOLLOWER ஆகிடுங்க. உங்க ப்ளாகுக்கு 50வது FOLLOWER நான் தான்.
என் ப்ளாக் 'manammanamviisum.blogspot.in
கொலுவெல்லாம் அழகாயிருக்கு.இனிப்பும் அப்படியே.
நன்றி காமாட்சி அம்மா....