•Monday, December 17, 2012
இந்த குறிப்பு எனக்கு ரொம்ப புதுசு.... கல்யாணத்துக்கு பிறகு தான் இதை கேள்விப்பட்டேன்.... செய்து பார்க்கும் போது ரொம்ப நல்லா இருந்தது.... உடம்புக்கும் ரொம்ப நல்லது... பித்தத்தை குறைக்கும்.... குறிப்பு என்னனு பார்ப்போமா.... ஆரஞ்சு தோல் பச்சடி....
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு தோல் - 2 பழம் தோல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தியம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
ஆரஞ்சு தோலை பிரித்து தனியாக வைக்கவும்.
ஆரஞ்சு தோலை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி வைக்கணும்.
புளியை கெட்டியாக கரைத்து,புளி தண்ணீர் எடுத்து அதில் உப்பு, வெல்லம் போட்டு கரைத்து வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் போட்டு வறுக்கணும்.கடுகு வெடிக்க விட்டு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு வறுத்து, அதில் ஆரஞ்சு தோல் போட்டு வதக்கவும்.
புளி தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைக்கணும்....
திக்காக ஆகும் வரை கொதிக்க விடவும்....
திக்காக வந்ததும் இறக்கி விடவும்.
தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்...
இனிப்பு, புளிப்பு, காரம் எல்லா டேஸ்டும் இருக்கும்... எங்க வீட்டில் சாதத்துக்கு கூட போட்டுண்டு, பிசைந்து சாப்பிடுவாங்க.... ரொம்ப நல்லா இருக்கும்..... ரெண்டு வாரம் வைத்து சாப்பிடலாம்.... ட்ரை பண்ணி பாருங்க.....

புளி குழம்புக்கு கொதிக்க வைக்கற மாதிரி கொதிக்க வைக்கணும்..
திக்காக வந்ததும் இறக்கி விடவும்.
தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்...
இனிப்பு, புளிப்பு, காரம் எல்லா டேஸ்டும் இருக்கும்... எங்க வீட்டில் சாதத்துக்கு கூட போட்டுண்டு, பிசைந்து சாப்பிடுவாங்க.... ரொம்ப நல்லா இருக்கும்..... ரெண்டு வாரம் வைத்து சாப்பிடலாம்.... ட்ரை பண்ணி பாருங்க.....
பச்சடி
|
17 comments:
இது ரெம்ப புதுசா இருக்கு ப்ரியா. நான் கேள்விப்படவில்லை. இப்போ இங்கு சீசன்.செய்துபார்போம்.வித்தியாசமாக இருக்கு.
ஒரு டவுட். தோலில் ஒருவித கசப்பு இருக்குமல்லவா? அது வராதுதானே.
இது எனக்கும் புதுசாக இருக்கிறது ப்ரியா.
செய்து பார்க்கிறேன்.
கடைசி போட்டோவைப் பார்த்தால் நாவில் எச்சி ஊறுகிறது.
பகிர்வுக்கு நன்றி.
ராஜி
நன்றி ப்ரியசகி. லைட் டா கசப்பு இருக்கும்..... ரொம்ப தெரியாது.... புளிப்பு, இனிப்பு எல்லாம் இருப்பதால் சுவையாக தான் இருக்கும்.... இப்போ உங்களுக்கு சீசன் என்றால், முதலில் கொஞ்சமாக ட்ரை பண்ணி பாருங்க.... உடம்புக்கும் ரொம்ப நல்லது....
நன்றி ராஜலக்ஷ்மி மேடம்....
//கடைசி போட்டோவைப் பார்த்தால் நாவில் எச்சி ஊறுகிறது // அப்போ சீக்கிரமாக ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்லுங்க.....
எங்க வீட்டுல அந்த புளி எஸ்சென்ஸ் இருக்கு இல்லையா, அதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க.... நான் தளர் மட்டும் எடுத்து ( ஆரஞ்சு தோல் ) தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடுவேன்.... இந்த குறிப்பு எங்க அம்மாவுக்கு கூட புதுசு.... நான் ஊருக்கு போகும் போது செய்து கொண்டு போனேன்... ரொம்ப நல்லா இருக்குனு சொல்லி விரும்பி சாப்பிட்டாங்க.... ப்ரியசகி கொஞ்சமா செய்து ட்ரை பண்ணி பாருங்க.... ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்லுங்க....
நானும் இதுபோல் செய்வேன்,நன்றாக இருக்கும்.உங்க படத்தைப் பார்க்கும்போது செய்து சாப்பிட ஆசை வந்துடுச்சு..
MMMM.. Tasty Tasty Pachadi....
Pachadi using Orange peel ??! Will not be bitter ??? Glad to see such new innovative recipe... Happy to follow you as well...
http://recipe-excavator.blogspot.com
Nice recipe priya ..shall try soon!
புளிக்காச்சல்மாதிரி,ஆரஞ்ச் வாஸனையுடன் மேலும் ஒரு பிடி சாதம் சாப்பிடத் தூண்டும்.
//உங்க படத்தைப் பார்க்கும்போது செய்து சாப்பிட ஆசை வந்துடுச்சு..//நன்றி மேனகா.
புளிக்காச்சல்மாதிரி,ஆரஞ்ச் வாஸனையுடன் மேலும் ஒரு பிடி சாதம் சாப்பிடத் தூண்டும்.
நன்றி சௌம்யா
சங்கீதா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.... செய்து பாருங்க... கசக்காது...ரொம்ப நல்லா இருக்கும்...
நன்றி மகி.... ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்லுங்க..
நன்றி காமாட்சி அம்மா... நீங்க சொல்லறது ரொம்ப கரெக்ட்.... என்னோட அம்மாக்கு இந்த பச்சடி செய்து தரும்போது, பேர் சொல்லவே இல்லை....அவங்க வாசனை பார்த்து விட்டு, புளிகச்சல் தானேனு கேட்டாங்க.... அதே வாசனையுடன், ஆரஞ்சு வாசனையும் சேர்த்து அருமையா இருந்தது....
Very nice dish.....