•Wednesday, July 27, 2011
மகி ஒரு முறை எனக்கு கேரட் அல்வா பண்ணி அனுப்பி இருந்தாங்க. மகி கிட்ட யாரும் சண்டை போட போய்டாதீங்க. உங்களுக்கு எல்லாம் அனுப்பற மாதிரி எனக்கும் போட்டோ - ல தான் அனுப்பி இருந்தாங்க. வெறும் பார்க்க மட்டும் தான் முடிந்தது ருசிக்க முடியலை. செய்முறை ஈஸியா தானே இருக்கு நாமே செய்து பார்க்கலாமேனு செய்ய ஆரம்பித்தேன். இப்போ என்னவருக்கு புடிச்ச ஸ்வீட்ல இதுவும் இடம் புடிச்சுடுத்து.
முந்திரி, திராட்சைக்கு நடுவுல தெரியுது பாருங்க..... அதான் கேரட் அல்வா.... :)
வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை பொறித்து எடுத்துக்கணும்.
அதே வானலியில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு துருவிய கேரட் போட்டு பச்சை வாசனை போக வதக்கணும். கேரட் துருவல் முழ்கும் அளவு பால் விட்டு திக்காக வரும் வரை கிளறனும். அப்புறம் தேவையான அளவு சக்கரை போட்டு இன்னும் கொஞ்சம் நெய் விட்டு நல்லா கிளறனும். சேர்ந்து வரும்போது நெய்ல பொரிச்சு வச்சு இருக்க முந்திரி, திராட்சை போட்டு கிளறி இறக்கினால் கேரட் அல்வா ரெடி.
sweets
|
4 comments:
ப்ரியா,இந்தப்போஸ்ட் அப்டேட் ஆகவே இல்ல என் டாஷ்போர்ட் & ப்ளாக்லிஸ்ட்ல.இன்னும் தக்காளி தொக்குதான் இருக்கு.இங்கே வந்தா அசத்தலா அல்வா குடுத்திருக்கீங்க! :)
சூப்பரா இருக்குது கேரட் அல்வா! :P:P
ஆஹா! சூப்பர் அல்வா ப்ரியா.
//முந்திரி, திராட்சைக்கு நடுவுல தெரியுது பாருங்க.....// நானும் படிக்கற விட்டுட்டு சீரியசா பார்த்தேன். கடைசில //அதான் கேரட் அல்வா....// ம். நடத்துங்க. :)
நன்றி மகி...
நன்றி இமா.