Author: Priya ram
•Friday, August 30, 2013
இந்த பொங்கல் ரொம்ப ஈஸியா செய்துடலாம்....மகி ஒரு முறை அவங்க ப்ளாக் ல போஸ்ட் செய்து இருந்தாங்க...அதை பார்த்து ட்ரை பண்ணேன்...என்னோட மாமனார்க்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு...இப்போ நைட் டின்னெர்  பண்ணனும்னா, புளி பொங்கல் செய்துடுனு சொல்லுவார்... ஈஸி என்பதால் நானும் உடனே செய்து விடுவேன்....


தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வெந்தயம்
வேர்கடலை - 1 கைப்பிடி
கருவேப்பிலை
பெருங்காயம்
காய்ந்த மிளகாய் - 8
புளி -  எலுமிச்சை அளவு
உப்பு
பச்சரிசி நொய் - 1 ஆழாக்கு

செய்முறை :

திக்காக 2  கப் புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்...
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய், வேர்கடலை போட்டு வதக்கி புளி கரைசல் 2 கப் விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும்.....


நொய்யை களைந்து வடிய விட்டு  கொதிக்கும் புளிகரைசலில் போட்டு ஒரு முறை கிளறி குக்கரை மூடி, 2 விசில் விடவும்....




ப்ரெஷர் போனதும் குக்கரை திறந்து கிளறினால் புளி பொங்கல் தயார்....



வடாம்,சிப்ஸ் தொட்டுண்டு சாப்பிடலாம்....நான் தயிர் தொட்டுண்டு சாப்பிட்டேன்...ரொம்ப நல்லா இருந்தது....
Author: Priya ram
•Tuesday, August 06, 2013
Author: Priya ram
•Thursday, July 25, 2013
இந்த ரெசிபி ரொம்ப நாளா என்னோட அண்ணன் கேட்டுகிட்டு இருந்தாங்க.... என் கணவருக்கு   பாகற்காய்  புடிக்காது... அதான் இந்த பிட்லை செய்வதற்கு ரொம்ப  நாள் ஆகிடுச்சு.....




தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பாகற்காய் - 2
கடலைக்காய் - 1 கை
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 11/2 கரண்டி
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க :
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிக்கை
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

துவரம் பருப்பு , கடலை பருப்பை குழைய வேக வைக்கவும்...


புளி தண்ணீர் கரைத்து வைக்கவும்...
வறுத்து அரைக்க வேண்டியவற்றை 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து அரைத்து வைக்கவும்...


பாகற்காயை பொடியாக நறுக்கி தரையில் பரப்பி வைக்கவும்.... ( தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும் )



தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்....
கடலைக்காயை தண்ணீரில் போட்டு வைக்கவும்....

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு வெடிக்க விடவும்.. அதில் கடலைக்காய்,  பாகற்காய்,தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் ..


புளி தண்ணீர் கொட்டி உப்பு, மிளகாய் பொடி போட்டு கொதிக்க விடவும்...


வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதை கொட்டி கலந்து வைக்கவும்.

காய் வெந்து புளி தண்ணீர் சுண்டி வந்ததும்,




பருப்பு,அரைத்த விழுதை கொட்டி கொதிக்க வைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும்....



பாகற்காய் பிட்லை ரெடி...ரோஸ்ட் காயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். ...


நான்  முருங்கைக்காய், கத்தரிக்காய்,உருளைகிழங்கு போட்டு காய் செய்தேன்....நன்றாக  இருந்தது...
Author: Priya ram
•Wednesday, April 03, 2013
என் பொருட்கள் தான் எனக்கு மட்டும் தான்.....தொடர்பதிவு...எழுத சொல்லி மகி என்னை அழைச்சு இருந்தாங்க.... நான் எப்பவும் யாராவது ஏதாவது பொருள் கொடுத்தால், அதை அவங்க நியாபகமா, கொடுக்கற நாள் நியாபகமா ரொம்ப பத்திரமா எடுத்து வைப்பேன்... அப்படி எடுத்து வச்சு இருக்கிற பொருட்கள் பத்தி தான் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்...

இது எங்க அம்மா நான் காலேஜ் படிக்கும் போது வங்கி தந்த கொலுசு......வெள்ளை கல் வச்சு சிவப்பு  மணிகளுடன் ரொம்ப அழகா இருக்கும்.. அதுக்கு கீழ இருக்க தங்க நிற  கொலுசு என்னோட கல்யாணம் அப்போ வாங்கி தந்தது .... மடிசார் கட்டிண்டு இந்த தங்க நிற கொலுசு போட்டுண்டு,காலில் மருதாணி வச்சிண்டு, அம்மி மிதிக்கும் போது ரொம்ப அழகா இருந்தது...



இது என்னோட கணவர் கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு வாங்கி தந்த மேக்கப் கிட்....



நான் மை, பொட்டு தவிர வேற எதுவும் யூஸ் பண்ண மாட்டேன்னு அப்போ அவருக்கு தெரியாது.....



இது எங்க அம்மா எங்களோட கல்யாணம் அப்போ, ராம்க்கு விரத பொட்டியில் தந்த டர்க்கி டவல்... எனக்கு ரொம்ப புடிச்ச கலர்... ரொம்ப பத்திரமா வச்சு இருக்கேன்...


ராம் எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் தந்த முதல் கிரீடிங் கார்டு.....


இதுவரை நான் அவருக்கு தந்து இருக்க கார்டு.....இதுல ரெண்டு நானே பண்ணது.... இதையும் நான் தான் பத்திரமா பாதுகாத்து வச்சு இருக்கேன்....



இந்த நகை வைக்கற பாக்ஸ், என்னோட தோழி, வேலை பண்ணும்போது வாங்கி தந்தது.....



எங்க கல்யாணம் டைம் ல ராம்க்கு எங்க அம்மா, மாப்பிள்ளை மோதிரம் போட்டாங்க.. அந்த மோதிரம் இந்த டெட்டி குள்ள தான் வச்சு தந்தது.....




இந்த பொம்மை எனக்கு ரொம்ப புடிக்கும்.. இப்போ இதுக்குள்ள என்னோட ரிங் இருக்கு....



இது என்னோட மாமனார் எனக்கு வாங்கி தந்த வளையல் கிட்.... இது மாதிரி எங்க அக்காவும் எனக்கு நிறைய வாங்கி தந்து இருக்கா....



நிறைய வளையல் இருந்தாலும், ராம் ஆபீஸ் friend மனைவி, என்னோட நல்ல தோழி, எனக்கு வாங்கி தந்த இந்த நார்த் இந்தியன் வளையல் எனக்கு ரொம்ப புடிக்கும்....



என்னோட சின்ன மாமியார் பொண்ணு, என்னோட சின்ன நாத்தனார் எனக்கு வாங்கி தந்த முத்து மாலை..... எனக்கு கல்யாணம் ஆன புதுசில் அவ வாங்கி தந்தது.....



என்னோட தம்பி எனக்கு வாங்கி தந்த இந்த உண்டியல்....



என்னோட அக்கா வாங்கி தந்த இந்த சுடிதார்.... கல்யாணத்துக்கு முன்னாடி இந்த சுடிதார் போட்டு கிட்டு தான் ராம் - முதல் முறை மீட் பண்ணது....




ராம் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த - முதல் காதலர் தினத்துக்கு இந்த pooh  பொம்மை வாங்கி தந்தார்...அதுகூட இருக்க பொம்மை எல்லாம் அதோட கூட வந்தது... :)


இந்த கார்டு - என்னோட நாத்தனார் கல்யாணத்துக்கு முன்னாடி வந்த என்னோட பிறந்த நாளுக்கு அனுப்பின கார்டு....இது கூடவே எனக்கு புடவை, வளையல்,கொலுசு, செயின், கிளிப் எல்லாம் வாங்கி அனுப்பி இருந்தாங்க.... ஒரு பெரிய பார்சல் வந்தது....



இந்த பொம்மை எல்லாம் எனக்கு ராம் வாங்கி தந்தது....

இது தாய்லாந்து ல வாங்கி தந்தது....



இது ரோட்ல வித்துகிட்டு போயிட்டு இருந்தாங்க....பார்த்து வேணும்னு கேட்டதுல வாங்கி தந்தது.....



இது மதுராந்தகம் தேர் திருவிழாவில் வாங்கி தந்தது...



இது ராம் ஸ்கூல் தோழி எனக்கு வாங்கி தந்த கிட்....



ஒன்னுக்குள்ள ஒண்ணுனு ரொம்ப அழகா இருக்கும்....



இப்போ கொஞ்ச நாள் முன்னாடி ராம் சவுத் கொரியா போய் இருக்கும் போது, ஏர்போர்ட் -இல் இந்த பொம்மை அவங்களே தந்து, கூடவே குட்டி குட்டி கலர் பேப்பர் தராங்களாம்.... விருப்பம் இருக்கவங்க வாங்கி அதுக்கு டிரஸ் பண்ணி, அழகான பொம்மையா மாத்தலாம்.....

ராம் அலங்கரிச்சு கொண்டு வந்த பொம்மை...


இன்னும் நிறைய பொருட்கள் என்கிட்டே நியாபகமா, நிறைய கதை சொல்லிட்டு இருக்கு.....நம்ம கிட்ட இருக்க பொருட்கள் எடுத்து பார்க்கும் போது ஒன்னு ஒன்னும் ஒரு கதை சொல்லும்.... அதை எல்லாம் நினைத்து பார்த்து, உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி..... இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி மகி....
Author: Priya ram
•Friday, March 08, 2013
ப்ளாக் தோழிகள் அனைவருக்கும் மகளீர் தின  நல்வாழ்த்துக்கள்....




Author: Unknown
•Sunday, January 20, 2013

இந்த இட்லி நல்லெண்ணெய், நெய் வாசனையோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மாவு அரைத்ததும் செய்து விடலாம்...

தேவையான பொருட்கள் :-

உளுத்தம் மாவு - 2 கை
அரிசி - 1 1/2 ஆழாக்கு
மிளகு பொடி  - 4 ஸ்பூன்.
சீரக பொடி - 1 ஸ்பூன்
சுக்குபொடி - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
புளிச்ச தயிர் - 1/2 கப்

செய்முறை :

1. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்து மாவு 2 கை எடுத்துக்கணும்...
2. 2 ஆழாக்கு அரிசியை ரவை மாதிரி மிச்சில அரச்சுக்கணும்..இதுக்கு பேர் தான் அரிசி உடைசல்..இதை வைத்து உப்புமா, தவளை தோசை, காஞ்சீபுரம் இட்லி பண்ணலாம்...
3. அரிசி உடைசலை தண்ணீர் விட்டு களைந்து, உளுந்து மாவில் சேர்க்கணும்...


4. புளிச்ச தயிர் விட்டு நன்றாக கலக்கணும்...
5. நெய்யில் முந்திரி வறுத்து கொட்டனும்...
6. எண்ணெய், நெய், மிளகு பொடி,சீரக பொடி ,  உப்பு, சுக்கு பொடி எல்லாம் போட்டு கலந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்...



7. குட்டி, குட்டி டம்ளரில் நெய் தடவி மாவு விட்டு



 வேக வைத்து எடுக்கணும்...


 கத்தியால் கேக் எடுப்பது போல் எடுத்தால்  காஞ்சீபுரம் இட்லி ரெடி..


8. மிளகாய் பொடியுடன் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும்...


மாவு அரச்சவுடன் 1/2 மணி நேரம் வைத்து உடனே  செய்து விடனும்... இந்த இட்லிக்கு கார சட்னி கூட தொட்டுண்டு சாப்பிடலாம்...  "அம்மா சமையல்" ல இந்த குறிப்பு சீக்கிரம் தருவதாக சொல்லி இருந்தேன்.. ரொம்ப லேட் ஆகிடுத்து... முயற்சி செய்து பாருங்க..
Author: Unknown
•Friday, January 11, 2013

16  புள்ளி கோலம்  :-


 17  புள்ளி கோலம்  :-


18 புள்ளி கோலங்கள் :-



 19 புள்ளி கோலங்கள் :-



21 புள்ளி கோலங்கள் :-






போடோஸ்  பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.... பொங்களுக்கு வாசலில் போட பயன்படும்னு அடுத்த செட் சீக்கிரம் போட்டு விட்டேன்...
Related Posts Plugin for WordPress, Blogger...