Author: Priya ram
•Saturday, July 09, 2011
என்னோட தங்க மரம் போஸ்ட்டில் உபயோகிச்ச மணிகளை வைத்து இந்த மணி  செட் பண்ணேன். இதில் நான் கழுத்துக்கு மணி, கம்மல், கைக்கு ப்ரேஸ்லெட், காலுக்கு கொலுசு எல்லாம் பண்ணேன். முதலில் காலுக்கு கொலுசு பண்ணும் போது நிறைய மணி வச்சு செய்தேன். அப்புறம் மூணு மூணு மணி மட்டும் வைத்து செய்தேன். ரெண்டையும் போஸ்ட் பண்ணி இருக்கேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.




Author: Priya ram
•Wednesday, July 06, 2011
quilling paper இந்த பேப்பர் எப்படி இருக்கும்.... எப்படி இதுல பூக்கள் மாதிரி பண்ணறதுன்னு காண்பிக்க இந்த பதிவு. இந்த பேப்பர் கடைல வாங்கும் போதே இதனுடன் ஒரு டூல் தருவாங்க. அதை வச்சு தான் பூக்கள் பண்ணுவோம்.
மொத்தமா quilling  பேப்பர் கிட் வாங்கினா 125  ரூபாய் ஆகும். அதற்க்கு பதில் கலர் A4  பேப்பர் வாங்கி தேவையான அளவு கட் பண்ணி எடுத்துக்கலாம். டூல்க்கு குச்சியை இந்த மாதிரி கீறி எடுத்துக்கலாம். அதை வச்சு பூக்கள் நிறைய செய்யலாம்.


கலர் A4  பேப்பர் வாங்கி இந்த மாதிரி கட் பண்ணி வச்சுக்கணும்.


 இது தான் கிட் உடன் வரக்கூடிய டூல்


அந்த டூல் ல பேப்பர் வச்சு இப்படி தான் சுத்தணும்.



இந்த மாதிரி சுத்தி கிட்டே வரணும்.



இந்த மாதிரி முழுக்க சுத்தியதும் இந்த மாதிரி லூசாக எடுத்து வச்சுக்கணும்.


கொஞ்சம் லூசாகவே வச்சு முனையை மட்டும் பெவிகால் வைத்து ஒட்டிடனும்.




ஒரு பக்கம் மட்டும் நீட்டு வாக்கில் புடிச்சு அழுத்தினா திலகம் வடிவம் கிடைச்சிடும். இந்த மாதிரி நிறைய வடிவம் மடிக்கலாம்.



நடுவில் ஒரு வட்டம் வச்சு சுத்தி திலகம் வச்சு ஒட்டினா  பூ ரெடி.

கான்வாஸ் போர்டு ரெடிமேடா கிடைக்கறது அதுல பூ எல்லாம் வச்சு பெவிகால் வைத்து ஒட்டி ஒரு wall hanging செய்யலாம்.

என்னோட மாமனார் பிறந்த நாளுக்காக நான் இந்த மாதிரி செய்து இருக்கேன். அதை பார்க்க இதை கிளிக் பண்ணுங்க.    http://priyasinterest.blogspot.com/2011/05/quilling-art-2.html



Author: Priya ram
•Tuesday, July 05, 2011
இந்த கொழம்பு எனக்கு ரொம்ப புடிக்கும். அம்மா பண்ணும்போது தேன் மாதிரி இருக்கும் தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடுவேன். என்னோட தம்பி வத்த கொழம்பு இல்லைனா ஆவக்காய் ஊறுகாய் (ஸ்................... சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்கு) ஏதாவது ஒன்னு இருந்தா தான் தயிர் சாதமே சாப்பிடுவான். எங்க வீடுகள்ல எல்லாம் நிறைய வெங்காயம் சேர்க்கவே மாட்டாங்க. அதனால வெங்காயம் போடாம நான் வத்த கொழம்பு பண்ணி இருக்கேன். உங்களுக்கு வெங்காயம் சேர்த்துக்கனும்னா சேர்த்துக்கலாம். எங்க அம்மா வீட்டுல வத்த கொழம்பு செய்யும் போது கடலைக்காய் எல்லாம் போட மாட்டாங்க. எங்க மாமியார் விட்டுல போடுவாங்க. அதுவும் உப்பு, காரம், புளிப்பு எல்லாம் ஒரச்சிண்டு சூப்பர் ரா இருக்கும்.




தேவையான பொருட்கள் :

கடலை எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
உளுத்தம் பருப்பு - 1 / 4  ஸ்பூன்
கடலை பருப்பு -  1 / 4  ஸ்பூன்
துவரம் பருப்பு -  1 / 4  ஸ்பூன்
வெந்தயம் -  1 / 4  ஸ்பூன்
கடலைக்காய் -  1 / 4  கப்
தக்காளி - 1
கத்தரிக்காய் - தேவையான அளவு. நான் 6  காய் போட்டு இருக்கேன்.
புளி -  ஒரு எலுமிச்சை அளவு
உப்பு
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
நல்லெண்ணெய் - 2  ஸ்பூன்






கத்தரிக்காய் இப்படி தான் நறுக்கிக்கணும்.

செய்முறை :

புளியை  தண்ணீரில் ஊற வச்சு திக்காக கரைச்சு வச்சுக்கணும்.
வாணலியில் கடலெண்ணெய் விட்டு கடுகு தாளித்து பெருங்காயம் போட்டு  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கடலைக்காய், வெந்தயம் போட்டு கொஞ்சமாக வதக்கணும். தக்காளி பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கத்தரிக்காய் போட்டு, கத்தரிக்காய் மேல் தோல் சுருங்கும் வரை வதக்கணும். வதங்கியதும் புளி தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு கிளறாமல் அப்படியே மூடி வச்சிடணும். நல்லா கொதிச்சு பச்சை வாசனை போனதும் கிளறி இறக்கிடணும். அப்புறம் சூட்டுடன் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் மேல விட்டு கலந்தால்  வத்த கொழம்பு தயார்.








கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா எங்கயாவது ஊருக்கு போய்ட்டா நானும், எங்க அக்காவும் தான் சமைப்போம். எங்க அம்மாவோட சுவை இருந்தா தான் என் தம்பி சாப்பிடுவான். சமைக்கும் போது பக்கத்துல நின்னு பார்த்து கிட்டே இருப்பான். சுவை சரி இல்லைனா... அம்மா உப்பு, மிளகாய் பொடி போட்டா கிளறவே மாட்டாங்க நீ கிளறி பண்ண அதான் சுவை சரி இல்லைன்னு சொல்லி சாப்பிடவே மாட்டான். அதுல இருந்து எப்போ சாம்பார், வத்த கொழம்பு எது பண்ணாலும் உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்பை சிம் ல வச்சிட்டு அப்படியே மூடி வச்சிடுவேன். அது நல்லா கொதிச்சு சுண்டி வந்ததும் நன்றாக கிளருவேன். 
வத்த கொழம்பு இத மாதிரி ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் நிறைய விடணும்னு நினைக்கறவங்க நிறைய விடலாம். எங்க வீட்டுல எண்ணெய் நிறைய சேர்த்துக்க மாட்டாங்க அதான் நான் கொஞ்சமா விட்டு செய்து இருக்கேன்.
Author: Priya ram
•Sunday, July 03, 2011


தேன்குழல்  செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2  கப்
உளுத்தம் மாவு - 2  கைபிடி
வெண்ணெய்
பெருங்காயம்
சீரகம்
உப்பு




செய்முறை :
உளுத்தம் மாவு செய்ய உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்தால் உளுத்தம் மாவு கிடைக்கும். மேலே உள்ள அனைத்தும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் தேன்குழல் தட்டு போட்டு மிதமாக காய்ந்த எண்ணையில் பொறித்து எடுத்தால் தேன்குழல் ரெடி.

குறிப்பு :

முறுக்கு குழலில் 5  ஓட்டை இருக்குமாறு ஒரு தட்டு இருக்கும் அது தான் தேன்குழல் தட்டு.


Author: Priya ram
•Friday, July 01, 2011

ரிப்பன் பகோடா செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2  கப்
கடலை மாவு - 1  கப்
வெண்ணெய் - 1  ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
தண்ணீர்




செய்முறை :

மேலே சொன்ன எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து, குழலில் ரிப்பன் பகோடா தட்டு போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய ரிப்பன் பகோடா தயார்.





Related Posts Plugin for WordPress, Blogger...