இந்த தோசை பருப்பு, மிளகு, சீரக வாசனையுடன் ரொம்ப நல்லா இருக்கும். இதுக்கு தொட்டுக்க மிளகாய் பொடி, எண்ணெய் தான் சரியான காம்பினேஷன். தோசை மேல மொரு மொறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் உப்புமா மாதிரியே இருக்கும். சாப்பிட நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 / 2 கப்
பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 / 4 கப்
மிளகு
சீரகம்
காய்ந்த மிளகாய் - 2
அரிசி உடைசல் - 2 கப்
தயிர் - 1 / 2 கப்
உப்பு
செய்முறை :
அரிசி உடைசலை 2 முறை களைந்து, தயிர் விட்டு கலந்து வைக்கணும்.
துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கணும்.
மிளகு, சீரகம் 15 நிமிஷம் ஊற வைக்கணும்.
இந்த தோசைக்கு காரத்திற்கு மிளகாயை விட மிளகு தான் அதிகம் சேர்த்துக்கனும்.
பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொர கொரப்பாக அரச்சுக்கணும்.
அரைத்த விழுதை அரிசி உடைசல் கலவையுடன் கலந்து அடை மாவு பதத்திற்கு திக்காக கரைச்சுக்கனும்.
தடிமனாக, நிறைய எண்ணெய் விட்டு, மொரு மொறுப்பாக தோசை செய்தால் தவலை தோசை ரெடி.... சுட சுட செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்....
இந்த தோசையை, தோசை கல்லில் செய்வதை விட வாணலியில் செய்தால், இன்னும் நன்றாக இருக்கும். ஒரு கரண்டி மாவு எடுத்து வாணலியில் விட்டு, சுத்தி எண்ணெய் நிறைய விட்டு, அடுப்பை சின்னதாக வைத்து, மூடி வச்சிடணும். வெந்ததும், திருப்பி போட்டு (கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், லாவகமா திருப்பி போடணும் ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்தால், குண்டு குண்டாக தோசை சூப்பர் ரா இருக்கும்....
பார்க்க சாதா தோசை மாதிரி இருந்தாலும் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன்.....
குறிப்பு :
அரிசில கொஞ்சமா தண்ணி தளிச்சு பிசறி வச்சிண்டு, ரவை மாதிரி மிக்சில போட்டு ஒடச்சிக்கணும். ஒன்னும் ரெண்டுமாக இல்லாம, ரொம்ப மாவாவும் இல்லாம ரவை மாதிரி ஒடச்சிக்கணும்.
இந்த அரிசி ஒடசலை வச்சு அரிசி உப்புமா, உப்புமா கொழுக்கட்டை, தவலை தோசை எல்லாம் செய்யலாம்.