•Saturday, August 04, 2012
மகி ப்ளாக் - ல 3D ஒரிகாமி போல்டிங் பார்த்ததில் இருந்து.... அவங்க எப்போ அந்த போல்டிங் வைத்து செய்த வொர்க்ஸ் போடுவாங்கன்னு காத்து கிட்டு இருந்தேன்... அப்புறம் youtube வீடியோ பார்த்து, அவங்க கிட்ட ஐடியா கேட்டு செய்ய ஆரம்பித்தேன்.... இப்போ ஆர்வம் அதிகமாகிட்டே இருக்கு... மடிக்க ஆரம்பிக்கும் போது கஷ்டமா தான் இருந்தது... ஆனால் இப்போ நிறைய செய்யணும் போல இருக்கு...
அன்னப்பறவை : இந்த பறவை செய்து முடித்ததும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.... ஒரிகாமி பேப்பர், construction paper வாங்கி செய்யும் வரை பொறுமை இல்லை... வீட்டில் இருந்த A4 சீட் வைத்தே செய்ய ஆரம்பித்தேன்...
இந்த அன்னப்பறவை செய்ய 205 வெள்ளை முக்கோணங்கள், 1 சிவப்பு முக்கோணம் தேவை....
பறவையை பார்த்தாலே தெரியும்.... பறவையின் பின் பகுதி, ரெண்டு ரெக்கைகள் மட்டும்.. முக்கோணம் திருப்பி சொருகி இருக்கிறேன்....
இந்த அன்னப்பறவையை இந்த வீடியோ பார்த்து செய்தேன்....
இதயவடிவ கூடை : இந்த கூடையும் செய்து முடித்ததும் பார்க்க ரொம்ப அழகா இருந்தது...
இந்த இதய வடிவ கூடை செய்ய மொத்தம் 270 வெள்ளை முக்கோணங்கள் மற்றும் 1 சிவப்பு முக்கோணம் தேவை....
இந்த கூடையில் திருப்பி சொருகர வேலை இல்லை... எல்லாம் நேர்ல சொருகி தான் செய்யணும்...
இந்த கூடை இந்த வீடியோ பார்த்து செய்தது....
இந்த கூடை இல் இப்படி மாறுதல் செய்தால் நார்மல் கூடை கிடைக்கும்...
பூ கூடை கூட youtube இல் பார்த்தேன்.. ஆனால் அதற்க்கு ரெட் கலர் தேவைப்பட்டது.. அப்போ என் கிட்ட ரெட் கலர் பேப்பர் இல்லை...
பூ ஜாடி : இந்த பூ ஜாடி... மகி ப்ளாக் பார்த்து செய்தது...
மொத்தம் 11 வரிகள்.... ஒவ்வொரு வரியிலும் 13 முக்கோணங்கள் ... ஆக மொத்தம் 143 முக்கோணங்கள் இந்த பூ ஜாடி செய்ய தேவை...
மேல் ரெண்டு வரியில் மட்டும் முக்கோணங்கள் திருப்பி வைக்கணும்.... படம் பார்த்தால் புரியும்...
மொத்தம் 11 வரிகள்.... ஒவ்வொரு வரியிலும் 13 முக்கோணங்கள் ... ஆக மொத்தம் 143 முக்கோணங்கள் இந்த பூ ஜாடி செய்ய தேவை...
மேல் ரெண்டு வரியில் மட்டும் முக்கோணங்கள் திருப்பி வைக்கணும்.... படம் பார்த்தால் புரியும்...
அழகான விளக்கத்துடன் மகி ப்ளாக் ல சொல்லி இருக்காங்க.... நன்றி மகி... அதை இங்கே போய் பாருங்க...
இத்துடன் இந்த ஒரிகாமி வொர்க்ஸ் நிறுத்திக்கலாம்னு நினைக்கிற நேரத்தில் கலர் பேப்பர் கிடைத்து இருக்கு... அதனால் இது தொடரும்னு நினைக்கிறேன்.... பார்க்கலாம்...
12 comments:
அழகாக இருக்கு அன்னப்பறவை சூப்பர். இன்னும் அருமை இதயவடிவ கூடை .... கலக்கிட்டீங்க... அருமை... நானும் செய்துபார்க்கிறேன்... வாழ்த்துக்கள் ...
ப்ரியா ஒரிகாமி அன்னபறவை சூப்பர் அந்த heartவடிவ கூடையும் ரொம்ப அழகு .எல்லாமே அழகாருக்கு ப்ரியா ..தொடருங்க கலர் பேப்பரிலும் .
Superappu! :) will come back in a while....
ப்ரியா, அன்னம், கூடை, பூ ஜாடி மூணுமே அழகாக இருக்கு. சீக்கிரம் கலர்ஃபுல்லா அடுத்த மாடல்ஸ் செய்து போடுங்க.
என் வலைப்பூவையும் குறிப்பிட்டதுக்கு நன்றி! 3D ஓரிகாமில நான் ஜஸ்ட் புள்ளி வைச்சேன், நீங்க அழகழகா 3 கோலம் போட்டுட்டீங்க! :)) பாராட்டுக்கள்! :)
எல்லாமே சூப்பர் ப்ரியா. தொடருங்க. நானும் முடியுறப்ப தொடருறேன். ஹார்ட் கூடை புடிச்சிருக்கு. அன்னம் அழகா இருக்கு. பாராட்டுக்கள்.
ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆர்வத்தை வளத்துக்கறோம். உபயோகமான பொழுதுபோக்குல ஈடுபட முடியுறது சந்தோஷமா இருக்குல்ல!
புள்ளி, கோலம்லாம் இல்ல மகி - I am really enjoying this craft. பரபரன்னு இருக்கிறப்ப பேப்பர் மடிக்க ஆரம்பிச்சா கூலாகிருறேன். ;)
அதோட... ஒத்த ரசனை உள்ளவங்க கூட நட்பாகிக்கிறதும் சந்தோஷமா இருக்கு.
அடுத்த இடுகையை விரைவில் எதிர்பார்க்கிறேன் ப்ரியா.
நன்றி விஜி... நீங்களும் சீக்கிரம் செய்து ப்ளாக் ல போடுங்க...
நன்றி angelin....
நன்றி மகி... கலர் பேப்பர் கட் பண்ணி வச்சு இருக்கேன்... இன்னிமே தான் பண்ணனும்... கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... விரைவில் செய்து போஸ்ட் பண்ணறேன்...
நன்றி இமா... நீங்க சொல்லறதும் கரெக்ட் தான்.... யாராவது ஏதாவது புதுசா செய்து இருக்கறதை ஷேர் பண்ணா... உடனே அதே மாதிரி ட்ரை பண்ண தோணுது...
Really very nice work. keep it up.....
நானும் இந்த அன்னம் செய்யனும்.டைம்தான்??? நீங்க செய்த அன்னம் ரெம்ப அழகா இருக்கு. மற்றயதை கலரில செய்யுங்க. but வெள்ளையும் டிபரன்ட் ஆக இருக்கு.
me too done the same swan using A4 sheet.. can u tell me where u will buy color papers plz....
அந்த முக்கோணம் எப்படி செய்றது?