•Saturday, February 11, 2012
ஒரு முறை என்னோட நாத்தனார் எங்க வீட்டுக்கு வந்து இருந்தாள். நான் சப்பாத்தி மாவு பிசைய போகும்போது, நானும் வரேன்னு சொல்லி கிட்சென்ல வந்து பேசிண்டு இருந்தா... மாவு பிசையும் போது பிள்ளையார் பண்ண தெரியுமான்னு கேட்டேன்... தெரியாதுன்னு சொன்னா... உடனே இந்த பிள்ளையார் செய்து காண்பித்தேன்... சூப்பர் மன்னி -ன்னு சொன்னா...பிள்ளையார்க்கு கண்ணுக்கு என்ன செய்வதுனு யோசிச்சேன். எள்ளு வீட்டுல இருந்தது.. அதையே கண்ணாக வச்சுட்டேன்.
கண்ணு கரெக்ட் டா செட் ஆக்கிடுச்சு....
கிழே இருக்க எலி எங்க மாமியார் வந்து பண்ணாங்க.
எங்க வீட்டு சப்பாத்தி மாவு பிள்ளையார், மாவு கொழுக்கட்டை எல்லாம் எனக்கு வேண்டாம்....
எண்ணெய் கொழுக்கட்டை தான் வேணும்னு.... இந்த மாவு கொழுக்கட்டையை கிழே போட்டுட்டார்.
இப்போதைக்கு இந்த கொழுக்கட்டை வச்சுக்கோங்க.... இன்னும் கொஞ்ச நேரத்தில் எண்ணெய் கொழுக்கட்டை தரேன்னு சொல்லி, மாவு கொழுகட்டையை கையில் தந்தேன்.... அவர் கிட்ட சொன்ன மாதிரியே எண்ணெய் கொழுக்கட்டை பண்ணிட்டேன். செய்வதும் ரொம்ப ஈஸி தான்.
தேவையான பொருட்கள் :
துருவின தேங்காய்
வெல்லம்
மைதா மாவு
உப்பு செய்முறை :
துருவின தேங்காய், வெல்லம், வாணலியில் போட்டு நன்றாக கிளறி பூரணம் செய்து வச்சுக்கணும்.
மைதா மாவில் உப்பு போட்டு பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கணும்.
மைதா மாவு உள்ளே பூரணம் வைத்து கொழுக்கட்டை மாதிரி செய்து வச்சுக்கணும்.
கொழுகட்டையை எண்ணையில் போட்டு பொறித்து எடுத்தால் எண்ணெய் கொழுக்கட்டை ரெடி.
இந்த கொழுக்கட்டையை கோதுமை மாவு வைத்தும் இதே முறையில் செய்யலாம்.
பிள்ளையார், கொழுக்கட்டை எப்படி இருக்குனு சொல்லுங்க....
மஹி, நீங்க தந்து இருக்க இந்த விருதுக்கு நன்றி.... இந்த விருதை நான்
சௌம்யா - sowmya's creation க்கு கொடுக்கிறேன்.
sweets
|
8 comments:
பிள்ளையார் தெய்வீகமாக இருக்கு. கொழுக்கட்டையும்தான்.
பிள்ளையார் அழகா இருக்காரு ப்ரியா! என்னவர் ஒரு விநாயகர் சதுர்த்திக்கு மஞ்சள்ல இப்படி பிள்ளையார் செய்தார்..போட்டோ எடுத்துவைக்காம விட்டுடேன்!;) அந்த எள்ளு அழகா கண்ணுக்கு பொருந்தியிருக்கு!:)
எண்ணெய் கொழுக்கட்டை ..ம்ம்..இனிப்புன்னா ஓக்கே! அதுவும் டீப்ஃப்ரை போல செய்திருக்கீங்க,யம்மி! ஸ்வீட் சமோசா போலவே இருக்கு..ஹிஹி..மீ த எஸ்கேப்பூ!
குட்டி பிள்ளையார் சோ cute
கொழுக்கட்டை சூப்பர் ஆ இருக்கு.
.என்னுடைய ப்ளாக் கு முதல் விருது கொடுத்திருகீங்க மிக்க மகிழ்ச்சி
விருதுக்கு மிக்க நன்றி .
நன்றி மகி... செய்து சாப்பிட்டு பாருங்க... இன்னும் யம்மியா இருக்கும். செய்யும் போது ஒரே ஒரு கொழுக்கட்டை மட்டும் விரிந்து விட்டது... வெல்லம் பரவி டீப்ஃப்ரை மாதிரி தெரியுது... அருண் சார் செய்த பிள்ளையாரையும் போட்டோ எடுத்து இருக்கலாமே....
நன்றி காமாட்சி அம்மா..
நன்றி சௌம்யா... என்னோட நத்தனார்க்கு ரொம்ப புடிச்சு போச்சு இந்த பிள்ளையாரை... ஒரே சுத்தி சுத்தி போட்டோ எடுத்துண்டா..
very creative you are nice blog enjoyed visiting it.Thanks for becoming a follower. I had bookmarked your blog too
anandhirajan
http://scrapellery.blogspot.in/
thanks anadhirajan...