Author: Priya ram
•Friday, July 20, 2012
இதுக்கு முன்னாடியே ஒரு போஸ்ட் அம்மா சமையல் பத்தி போட்டு இருக்கேன்... இப்போ இந்த தடவை ஊருக்கு போய்  இருக்கும் போது (ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ) இந்த dishes எல்லாம் செய்து தந்தாங்க...

குட்டி இட்லி : குட்டி இட்லி செய்து, கூடவே அரச்சு விட்ட சாம்பார் செய்து... இட்லி மேல நிறைய சாம்பார் விட்டு, கொத்தமல்லி தூவி, அதன் மேல கொஞ்சம் நெய் விட்டு, ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டா  சும்மா சூப்பர் ரா இருக்கும்....

குட்டி இட்லி


அரச்சு விட்ட சாம்பார்


இட்லி, சாம்பார், கொத்தமல்லி, நெய்யுடன்




ஸ்வீட் பணியாரம் : இது கூட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்யறதும் ரொம்ப ஈஸி தான்... சீக்கிரம் குறிப்பு தரேன்...


போன ரெண்டு நாள்ல, ஒரு நாள் எவனிங் ஸ்நாக்ஸ்க்கு செய்து தந்தாங்க.. சூப்பர் ரா இருந்தது...


பூரி- சென்னா : சவுத் இந்தியன் சமையல்ல கலக்கிட்டு இருந்த எங்க அம்மா திடிர்னு சென்னா மசாலா, ராஜ்மா மசாலா, பைங்கண் பார்த்தா, ஆளு பராட்டா , புல்கா இப்படி நார்த் இந்தியன் சமையலும் சூப்பர் ரா செய்ய ஆரம்பிச்சு, இப்போ அதுலயும் கலக்கறாங்க... சமையல்ல ஆர்வம் இருந்தா எல்லா dishes யும் ஈசியா பண்ணிடலாம்... இல்லைங்களா ?



காஞ்சிபுரம் இட்லி : இந்த இட்லி சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மிளகு, சீராக வாசனையுடன், முந்திரி பருப்பு எல்லாம் போட்டு செய்வாங்க... இதுக்கு பெஸ்ட் காம்பினேஷன் மிளகாய்பொடி தான்.... சூப்பர் ரா இருக்கும்... விரைவில் ரெசிபி வரும்..




இன்னும் நாலு நாள்ல திரும்பவும் ஊருக்கு போறேன். வரலக்ஷ்மி நோன்பு வருது... ரெண்டு நாள் ட்ரிப்... எனக்கு புடிச்ச டிஷ் எல்லாம் பண்ண சொல்லி சாப்பிட்டு விட்டு, உங்களுக்கு போட்டோ எடுத்து வரேன். :)





Author: Priya ram
•Tuesday, July 10, 2012
ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ளாக் பக்கம் வருகிறேன்.

நிறைய பேர் செய்கிற பிஸ்கட், கேக், பன், இதையெல்லாம் பார்த்து, நானும் செய்யணும்னு ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கினேன். பிஸ்கட் மிக்ஸ், கேக் மிக்ஸ் வாங்கி ட்ரை பண்ணேன். ஒரு சில முறை சரியாக வரும்... ஒரு சில முறை சரியாக வராது. 

இப்போ நிறைய பேர் ப்ளாக் பார்த்து, ரெடியாக இருக்கும் மிக்ஸ் வாங்காமல் நாமே ட்ரை பண்ணலாம்னு, ட்ரை பண்ணி ரொம்ப நல்லாவும் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 3 / 4 கப்
வெண்ணிலா கஸ்டர்ட் பவுடர் - 3 / 4 கப்
கார்ன் மாவு ( corn flour ) - 3 டேபிள் ஸ்பூன் 
பவுடர் சுகர் - 1 / 2 கப்
பட்டர் - 1 / 2 கப்
வெண்ணிலா எஸ்சென்ஸ் - 1 / 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், கார்ன் மாவு மூன்றையும் கலந்து நன்றாக சலித்து வைக்கவும்.



வெண்ணையை நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.
அதனுடன் சக்கரை, வெண்ணிலா எஸ்சென்ஸ்,தயிர்  சேர்த்து சக்கரை கரையும் வரை அடிக்கவும்.



சலித்து வைத்திருக்கும் மாவை இந்த வெண்ணெய் கலவையில் சேர்த்து, சப்பாத்தி  மாவு மாதிரி பிசையவும்




இந்த மாவில் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி இடுவது போல் கொஞ்சம் திக்காக இட்டு பிஸ்கட் அச்சு கொண்டு, அச்சு வைத்து தனி தனியாக எடுத்து வைக்கவும்.



ஓவன் தட்டில் சிறிது மாவு தூவி பிஸ்கட்களை அடுக்கனும்



இந்த தட்டை ஒவேன்னுக்குள் அனுப்பி  180c  இல் 15 - 20 நிமிடம் வைத்து bake பண்ணனும் ( convectional mode - 180c -  15 - 20 மினிட்ஸ் )


பிஸ்கட் வெந்ததும் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கணும்


முட்டை இல்லாத பிஸ்கட் தயார்.


இதுவரை நானே மாவு பிசைந்து பிஸ்கட் முயற்சி செய்தது இல்லை. இது தான் முதல் முறை. இதுக்கு அப்புறம் நிறைய முட்டை இல்லாத பிஸ்கட் முயற்சி செய்யணும்.
Related Posts Plugin for WordPress, Blogger...