Author: Priya ram
•Tuesday, July 10, 2012
ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ளாக் பக்கம் வருகிறேன்.

நிறைய பேர் செய்கிற பிஸ்கட், கேக், பன், இதையெல்லாம் பார்த்து, நானும் செய்யணும்னு ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கினேன். பிஸ்கட் மிக்ஸ், கேக் மிக்ஸ் வாங்கி ட்ரை பண்ணேன். ஒரு சில முறை சரியாக வரும்... ஒரு சில முறை சரியாக வராது. 

இப்போ நிறைய பேர் ப்ளாக் பார்த்து, ரெடியாக இருக்கும் மிக்ஸ் வாங்காமல் நாமே ட்ரை பண்ணலாம்னு, ட்ரை பண்ணி ரொம்ப நல்லாவும் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 3 / 4 கப்
வெண்ணிலா கஸ்டர்ட் பவுடர் - 3 / 4 கப்
கார்ன் மாவு ( corn flour ) - 3 டேபிள் ஸ்பூன் 
பவுடர் சுகர் - 1 / 2 கப்
பட்டர் - 1 / 2 கப்
வெண்ணிலா எஸ்சென்ஸ் - 1 / 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், கார்ன் மாவு மூன்றையும் கலந்து நன்றாக சலித்து வைக்கவும்.



வெண்ணையை நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.
அதனுடன் சக்கரை, வெண்ணிலா எஸ்சென்ஸ்,தயிர்  சேர்த்து சக்கரை கரையும் வரை அடிக்கவும்.



சலித்து வைத்திருக்கும் மாவை இந்த வெண்ணெய் கலவையில் சேர்த்து, சப்பாத்தி  மாவு மாதிரி பிசையவும்




இந்த மாவில் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி இடுவது போல் கொஞ்சம் திக்காக இட்டு பிஸ்கட் அச்சு கொண்டு, அச்சு வைத்து தனி தனியாக எடுத்து வைக்கவும்.



ஓவன் தட்டில் சிறிது மாவு தூவி பிஸ்கட்களை அடுக்கனும்



இந்த தட்டை ஒவேன்னுக்குள் அனுப்பி  180c  இல் 15 - 20 நிமிடம் வைத்து bake பண்ணனும் ( convectional mode - 180c -  15 - 20 மினிட்ஸ் )


பிஸ்கட் வெந்ததும் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கணும்


முட்டை இல்லாத பிஸ்கட் தயார்.


இதுவரை நானே மாவு பிசைந்து பிஸ்கட் முயற்சி செய்தது இல்லை. இது தான் முதல் முறை. இதுக்கு அப்புறம் நிறைய முட்டை இல்லாத பிஸ்கட் முயற்சி செய்யணும்.
This entry was posted on Tuesday, July 10, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On July 11, 2012 at 2:29 PM , Sowmya said...

முதல் முறையே பிஸ்கட் சூப்பர் ஆ வந்துஇருக்கு.
ராம் என்ன சொன்னார்?

 
On July 11, 2012 at 3:21 PM , Priya ram said...

நன்றி சௌம்யா... ராம்க்கு ரொம்ப புடிச்சு இருந்தது பிஸ்கட்....

 
On July 11, 2012 at 10:51 PM , Mahi said...

பிஸ்கட் சூப்பரா இருக்கு ப்ரியா! நீட்டா ஸ்டெப்வைஸ் படங்கள்..அதிலயும் அந்த 4வது போட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! :)

 
On July 12, 2012 at 11:40 AM , இமா க்றிஸ் said...

எனக்கும் பிடிச்சு இருக்கு ப்ரியா.

 
On July 12, 2012 at 11:58 AM , காமாட்சி said...

பிஸ்கட் நன்றாக இருக்கு. இதே முறையில் உப்பு பிஸ்கட் செய்து பார்க்கணும்.படங்களெல்லாம் அழகாயிருக்கு

 
On July 12, 2012 at 6:32 PM , Priya ram said...

நன்றி மகி... எப்பவும் போல் எங்க மாமனார் கிட்ட பிஸ்கட் அச்சு வாங்கிண்டு வர சொன்னேன். அவர் ரெண்டு பாக்கெட் வாங்கிண்டு வந்துட்டார். ஒரு பாக்கெட் ல 6 shapes. அதே பெரிய சைஸ்ல இன்னொரு பாக்கெட். அச்சு பார்க்க அழகாக இருந்தது... அதான் அத்துடன் ஒரு போட்டோ எடுத்தேன்..

 
On July 12, 2012 at 6:35 PM , Priya ram said...

நன்றி இமா. நீங்க உங்க ப்ளாக்ல போட்டு இருக்க கோக் பாட்டேல் வொர்க் பண்ண பாட்டேல் தேடிகிட்டு இருக்கேன்.

 
On July 12, 2012 at 6:37 PM , Priya ram said...

நன்றி காமாட்சி அம்மா... நானும் அடுத்தது உப்பு பிஸ்கட் தான் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்....

 
On July 13, 2012 at 12:19 PM , Babs said...

very nice ka.....

 
On July 14, 2012 at 2:49 PM , Priya ram said...

நன்றி பாபு.

 
Related Posts Plugin for WordPress, Blogger...