Author: Priya ram
•Tuesday, September 04, 2012

பாக்கியம் ராமசாமி அவர்களின் "சில நேரங்களில் சில அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் வந்த நகைச்சுவை அனுபவம் இது. படித்து விட்டு ரொம்ப ரசிச்சேன். நீங்களும் ரசிக்க பகிர்கிறேன்.


சாத்துக்குடி வாங்கும்முன் யோசியுங்கள் :

கல்யாணம் பண்ணிக்கொள்ளுமுன்  யோசியுங்கள்,

வீடு வாங்குமுன் யோசியுங்கள்,

வேலையில் சேருமுன் யோசியுங்கள்,

கோபப்படுமுன் யோசியுங்கள்,

சிட் பண்டில் ஜாயின்ட் கையெழுத்துப் போடுமுன் யோசியுங்கள்,

கடன் கொடுக்கும் முன் யோசியுங்கள்,

மருத்துவ ஸ்பெஷலிஸ்ட் - இடம் போகுமுன் யோசியுங்கள்,

காரை சாலையில் பார்க் செய்யுமுன் யோசியுங்கள்,

மனைவி கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் என்றால் யோசியுங்கள்,

ஸ்வெட்டரை ட்ரை வாஷ் போடுமுன் யோசியுங்கள்,

- என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாத்துக்குடி வாங்கறதுக்கு முன்னே கூடவா யோசிக்க வேண்டும் ?

ஆமாம், ஆமாம்... சாத்துக்குடி வாங்கும் முன் ரொம்ப விஷயங்கள் யோசிக்க வேண்டும்.

கல்லெல்லாம் மாணிக்கக்  கல்லாகுமா ? வெளுத்ததெல்லாம் பாலாகுமா ? பச்சையாக உருண்டையாக இருப்பதெல்லாம் சாத்துக்குடி  ஆகுமா ?

தடபுடலாக ஒரு பாடகர் டிரஸ் செய்து கொண்டு, நெற்றியில் ஏராளமான மதமுத்திரைகள், தோளில் துப்பட்டாக்கள், கழத்தில் செயின் வாயில் சிவக்க சிவக்க வெற்றிலை பாக்கு,உடம்பு பூரா பரவிய செண்டு மனம். இதைப் பார்த்ததும் அவர் பிரமாதமாகப் பாடுவார் என்று யாராவது நினைத்தால் அது சரியாக இருக்காது. அவர் வாயைத் திறந்ததும்தான் இனிமையான சங்கீதத்துக்கும் அவருக்கும் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை நம்மால் கணிக்க முடியும்.

போலிகள் மனிதரில் மட்டுமல்ல, பழங்களிலும், முக்கியமாக சாத்துக்குடியில் நிறையவே உண்டு.

பெரிய உருண்டைப் பழத்துக்கு விலை அதிகமாயிருக்கும். நிச்சயதார்த்த சமயம் சபை நிறைக்கனும்னு ஒரு டஜனைத் தட்டில் பரப்பி வைக்க வேண்டுமானால் அவை பயன்படலாம்

ஒண்ணாம் நம்பர் காண்டா மிருகத் தோல்! பப்ளிமாசின் கசின் ப்ரதர் ரகமாயிருக்கும்.

தோல் மட்டும் ஒரு அங்குல தடிமனாக இருக்கும்

அதற்கென்று தோல் மெல்லிசா இருந்தால் ருசியாயிருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தோல் மெல்லிசாக இருக்கிற பழங்கள் புளிக்கும் பாருங்கள் ஒரு புளிப்பு. உரித்த பழத்தை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற உதார குணம் எந்தக் கஞ்ச மகா பிரபுவுக்கும் தோன்றக் கூடிய பயங்கரப்  புளிப்பு

சில தற்கால சாத்துக்குடிகள், ஆரஞ்சுப் பழ வண்ணத்தில் நடமாடுகின்றன. யாரோ கலப்புக் கல்யாணம் நடத்தியிருக்கிறார்கள்

தோலைப்  பார்த்து மயங்கி, கேட்கிற விலையைக் கொடுத்து வாங்கி, உரித்தால் புதிய மொந்தையில்  பழைய கள்  சமாசாரம்தான்.

இன்னொரு கசப்பான அனுபவத்தையும், நுகர்வோரின்  எச்சரிக்கைகாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

சாத்துக்குடி  என்றால் ஒன்று இனிக்க வேண்டும் அல்லது புளிக்க வேண்டும். சில பழம் கசந்து தொலைக்கும்

எலுமிச்சம் பழமா, சாத்துக்குடியா என்று இனம் கண்டு புடிக்க முடியாத அளவு சிறுசிறு சாத்துக்குடிகளைக் கொண்டு வந்து தலையில் கட்டும் கூடைகாரிகள் உண்டு.

ஜாலக்காக, ' ஜூஸ் பழம் சார்! இப்ப எங்கே கிடைக்குது' என்று இரண்டு டஜன் நம் தலையில் கட்டி விட்டுப் போய் விடுவாள்.

அவள் போன பிறகு நமக்கு நேரம் கிடைத்து மேற்படி பழங்களை அறுத்துப் பிழிந்தால் ஜூஸாவது ஒன்றாவது. ஜூஸ் நம்ம கண்ணிலிருந்து வந்தால் தான் உண்டு.

பழ ஸ்டாலில் வாங்கினால் ரொம்பப் பேரம் செய்ய முடியாது. பழக்கடைக்காரர்களில் பல பேருக்கு அரசியல் பின்னணி வேறு உண்டு.  அவர்களிடம் பேரம் பண்ணினால் தோலை  உரித்து விடுவார்கள் ( நம்ம தோலை )!

அவன் சொன்னதே விலை, கொடுத்ததே பழம். அடுக்கின வரிசையிலிருந்து நாம் காட்டும் பழத்தை செத்தாலும் எடுத்துத் தரமாட்டான்

மேற்படி பழங்கள் விலை அதிகமானாலும், கடையனின் ஜபுர் அதிகமாயிருந்தாலும் பழங்களில் கேவலமான புளிப்பு இருக்காது. பெயர் கேட்டு விடுமே என்று கொஞ்சம் நல்ல வெரைட்டி வைத்திருப்பான். சாத்துக்குடியில் ருசிக்கு முன்னதாக இன்னொரு இம்சையும் உண்டு.

கமலா ஆரஞ்சு போல உரித்தோமா, வாயில் போட்டுக் கொண்டோமா என்பது சாத்துக்குடியில் கிடையாது. உறித்தபின் ஒரு ஷேவிங் செய்ய வேண்டும்.

அந்த வெள்ளைப் படலத்தையும் நாரையும் ஜாக்கிரதையாக நீக்க வேண்டும். சில வயதாளிகள் அதை ஒரு வகை இனிய ஹாபியாக நினைக்கிறார்கள். இளையவர்களுக்கு அவ்வளவு பொறுமை இருக்காது. சரியாக உரிக்காமல் அப்படியே வாயில் அடைத்து கச்சக் பச்சக் என்று நாசூக்கு இல்லாமல் விழுங்கி வைப்பார்கள்.

ஒழுங்காக உள்தோல் பிரித்தபின் சுளைபிரி கட்டம், சுளைகள் எப்போதாவது தான் சமத்தாகப் பிரிந்து வரும். பெரும்பாலான சமயங்களில் கன்னாபின்னாவென்று பிரியும்.

சுளை எடுத்த பின் கொட்டை நீக்கு படலம். கொட்டைக்குச் சீரான கணக்கா ஒரு இழவா ? ஒரு சுளையில் நாலு இருக்கும்.  இன்னொன்றில் ஒன்றே ஒன்று இருக்கும். சிலதில் இல்லாததுபோல் மேலுக்கு ஏமாற்றி வாயில் போட்ட பிறகு பல் டிபார்ட்மெண்டால் கண்டு புடிக்கப்படும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சாத்துக்குடி பற்றி என்னால் சொல்ல முடியும்.

சாத்துக்குடி என்பது ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய பழம். ஆப்பிளை விட மலிவு. வாழைப் பழத்தை விட உயர்வு. ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் நடுத்தர வர்கத்தினர் சாத்துக்குடியை நாட அதுவே காரணம். நோயாளிகளுக்குப் பொழுதுபோக்க ஒரு சாதனம். கிள்ளிக் கில்லி நாள் பூரா உரித்துக் கொண்டிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை சாத்துக்குடியை யாராவது உரித்துத் தந்தால் சாப்பிடலாம் அதுவும் இனிப்பாக இருக்கிறது என்று உறுதிமொழி அவர்கள் அளித்தால்.

இல்லையேல் அந்த ஆஸ்பத்திரிப் பழத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்காமலிருப்பதே சிறப்பு.



Author: Priya ram
•Wednesday, August 08, 2012

இவை எல்லாம் நான் செய்த மணி மாலைகள்









பார்த்து விட்டு, எப்படி இருக்குனு சொல்லுங்க.....
Author: Priya ram
•Saturday, August 04, 2012
மகி ப்ளாக் - ல 3D ஒரிகாமி போல்டிங் பார்த்ததில் இருந்து.... அவங்க எப்போ அந்த போல்டிங் வைத்து செய்த வொர்க்ஸ் போடுவாங்கன்னு காத்து கிட்டு இருந்தேன்... அப்புறம் youtube வீடியோ பார்த்து, அவங்க கிட்ட ஐடியா கேட்டு  செய்ய ஆரம்பித்தேன்.... இப்போ ஆர்வம் அதிகமாகிட்டே இருக்கு... மடிக்க ஆரம்பிக்கும் போது கஷ்டமா தான் இருந்தது... ஆனால் இப்போ நிறைய செய்யணும் போல இருக்கு...
அன்னப்பறவை : இந்த பறவை செய்து முடித்ததும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.... ஒரிகாமி பேப்பர், construction paper வாங்கி செய்யும் வரை பொறுமை இல்லை... வீட்டில் இருந்த A4 சீட் வைத்தே செய்ய ஆரம்பித்தேன்...


இந்த அன்னப்பறவை செய்ய 205 வெள்ளை முக்கோணங்கள்,   1 சிவப்பு முக்கோணம் தேவை....

 
பறவையை பார்த்தாலே தெரியும்.... பறவையின் பின் பகுதி, ரெண்டு ரெக்கைகள் மட்டும்.. முக்கோணம் திருப்பி சொருகி இருக்கிறேன்....


இந்த அன்னப்பறவையை இந்த வீடியோ பார்த்து செய்தேன்....


இதயவடிவ கூடை : இந்த கூடையும் செய்து முடித்ததும் பார்க்க ரொம்ப அழகா இருந்தது...



இந்த இதய வடிவ கூடை செய்ய மொத்தம் 270 வெள்ளை முக்கோணங்கள் மற்றும்  1 சிவப்பு முக்கோணம் தேவை....


இந்த கூடையில் திருப்பி சொருகர வேலை இல்லை... எல்லாம் நேர்ல சொருகி தான் செய்யணும்...

இந்த கூடை இந்த வீடியோ பார்த்து செய்தது....

இந்த கூடை இல் இப்படி மாறுதல் செய்தால் நார்மல் கூடை கிடைக்கும்...




பூ கூடை கூட youtube இல் பார்த்தேன்.. ஆனால் அதற்க்கு ரெட் கலர் தேவைப்பட்டது.. அப்போ என் கிட்ட ரெட் கலர் பேப்பர் இல்லை...
பூ ஜாடி : இந்த பூ ஜாடி... மகி ப்ளாக் பார்த்து செய்தது...


மொத்தம் 11  வரிகள்.... ஒவ்வொரு வரியிலும்   13  முக்கோணங்கள் ... ஆக மொத்தம்  143  முக்கோணங்கள் இந்த பூ ஜாடி செய்ய தேவை...
 

மேல் ரெண்டு வரியில் மட்டும் முக்கோணங்கள் திருப்பி வைக்கணும்.... படம் பார்த்தால் புரியும்...


அழகான விளக்கத்துடன் மகி ப்ளாக் ல சொல்லி இருக்காங்க.... நன்றி மகி... அதை  இங்கே போய் பாருங்க...
 
இத்துடன் இந்த ஒரிகாமி வொர்க்ஸ் நிறுத்திக்கலாம்னு நினைக்கிற நேரத்தில் கலர் பேப்பர் கிடைத்து இருக்கு... அதனால் இது தொடரும்னு நினைக்கிறேன்.... பார்க்கலாம்...
Author: Priya ram
•Friday, July 20, 2012
இதுக்கு முன்னாடியே ஒரு போஸ்ட் அம்மா சமையல் பத்தி போட்டு இருக்கேன்... இப்போ இந்த தடவை ஊருக்கு போய்  இருக்கும் போது (ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ) இந்த dishes எல்லாம் செய்து தந்தாங்க...

குட்டி இட்லி : குட்டி இட்லி செய்து, கூடவே அரச்சு விட்ட சாம்பார் செய்து... இட்லி மேல நிறைய சாம்பார் விட்டு, கொத்தமல்லி தூவி, அதன் மேல கொஞ்சம் நெய் விட்டு, ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டா  சும்மா சூப்பர் ரா இருக்கும்....

குட்டி இட்லி


அரச்சு விட்ட சாம்பார்


இட்லி, சாம்பார், கொத்தமல்லி, நெய்யுடன்




ஸ்வீட் பணியாரம் : இது கூட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்யறதும் ரொம்ப ஈஸி தான்... சீக்கிரம் குறிப்பு தரேன்...


போன ரெண்டு நாள்ல, ஒரு நாள் எவனிங் ஸ்நாக்ஸ்க்கு செய்து தந்தாங்க.. சூப்பர் ரா இருந்தது...


பூரி- சென்னா : சவுத் இந்தியன் சமையல்ல கலக்கிட்டு இருந்த எங்க அம்மா திடிர்னு சென்னா மசாலா, ராஜ்மா மசாலா, பைங்கண் பார்த்தா, ஆளு பராட்டா , புல்கா இப்படி நார்த் இந்தியன் சமையலும் சூப்பர் ரா செய்ய ஆரம்பிச்சு, இப்போ அதுலயும் கலக்கறாங்க... சமையல்ல ஆர்வம் இருந்தா எல்லா dishes யும் ஈசியா பண்ணிடலாம்... இல்லைங்களா ?



காஞ்சிபுரம் இட்லி : இந்த இட்லி சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மிளகு, சீராக வாசனையுடன், முந்திரி பருப்பு எல்லாம் போட்டு செய்வாங்க... இதுக்கு பெஸ்ட் காம்பினேஷன் மிளகாய்பொடி தான்.... சூப்பர் ரா இருக்கும்... விரைவில் ரெசிபி வரும்..




இன்னும் நாலு நாள்ல திரும்பவும் ஊருக்கு போறேன். வரலக்ஷ்மி நோன்பு வருது... ரெண்டு நாள் ட்ரிப்... எனக்கு புடிச்ச டிஷ் எல்லாம் பண்ண சொல்லி சாப்பிட்டு விட்டு, உங்களுக்கு போட்டோ எடுத்து வரேன். :)





Author: Priya ram
•Tuesday, July 10, 2012
ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ளாக் பக்கம் வருகிறேன்.

நிறைய பேர் செய்கிற பிஸ்கட், கேக், பன், இதையெல்லாம் பார்த்து, நானும் செய்யணும்னு ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கினேன். பிஸ்கட் மிக்ஸ், கேக் மிக்ஸ் வாங்கி ட்ரை பண்ணேன். ஒரு சில முறை சரியாக வரும்... ஒரு சில முறை சரியாக வராது. 

இப்போ நிறைய பேர் ப்ளாக் பார்த்து, ரெடியாக இருக்கும் மிக்ஸ் வாங்காமல் நாமே ட்ரை பண்ணலாம்னு, ட்ரை பண்ணி ரொம்ப நல்லாவும் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 3 / 4 கப்
வெண்ணிலா கஸ்டர்ட் பவுடர் - 3 / 4 கப்
கார்ன் மாவு ( corn flour ) - 3 டேபிள் ஸ்பூன் 
பவுடர் சுகர் - 1 / 2 கப்
பட்டர் - 1 / 2 கப்
வெண்ணிலா எஸ்சென்ஸ் - 1 / 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், கார்ன் மாவு மூன்றையும் கலந்து நன்றாக சலித்து வைக்கவும்.



வெண்ணையை நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.
அதனுடன் சக்கரை, வெண்ணிலா எஸ்சென்ஸ்,தயிர்  சேர்த்து சக்கரை கரையும் வரை அடிக்கவும்.



சலித்து வைத்திருக்கும் மாவை இந்த வெண்ணெய் கலவையில் சேர்த்து, சப்பாத்தி  மாவு மாதிரி பிசையவும்




இந்த மாவில் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி இடுவது போல் கொஞ்சம் திக்காக இட்டு பிஸ்கட் அச்சு கொண்டு, அச்சு வைத்து தனி தனியாக எடுத்து வைக்கவும்.



ஓவன் தட்டில் சிறிது மாவு தூவி பிஸ்கட்களை அடுக்கனும்



இந்த தட்டை ஒவேன்னுக்குள் அனுப்பி  180c  இல் 15 - 20 நிமிடம் வைத்து bake பண்ணனும் ( convectional mode - 180c -  15 - 20 மினிட்ஸ் )


பிஸ்கட் வெந்ததும் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கணும்


முட்டை இல்லாத பிஸ்கட் தயார்.


இதுவரை நானே மாவு பிசைந்து பிஸ்கட் முயற்சி செய்தது இல்லை. இது தான் முதல் முறை. இதுக்கு அப்புறம் நிறைய முட்டை இல்லாத பிஸ்கட் முயற்சி செய்யணும்.
Related Posts Plugin for WordPress, Blogger...