Author: Priya ram
•Wednesday, July 27, 2011
மகி ஒரு முறை எனக்கு கேரட் அல்வா பண்ணி அனுப்பி இருந்தாங்க. மகி கிட்ட யாரும் சண்டை போட போய்டாதீங்க. உங்களுக்கு எல்லாம் அனுப்பற மாதிரி எனக்கும் போட்டோ - ல தான் அனுப்பி இருந்தாங்க. வெறும் பார்க்க மட்டும் தான் முடிந்தது ருசிக்க முடியலை. செய்முறை ஈஸியா தானே இருக்கு நாமே செய்து பார்க்கலாமேனு செய்ய ஆரம்பித்தேன். இப்போ என்னவருக்கு புடிச்ச ஸ்வீட்ல இதுவும் இடம் புடிச்சுடுத்து.



முந்திரி, திராட்சைக்கு நடுவுல தெரியுது பாருங்க..... அதான் கேரட் அல்வா.... :) 


வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை பொறித்து எடுத்துக்கணும்.
அதே வானலியில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு துருவிய கேரட் போட்டு பச்சை வாசனை போக வதக்கணும். கேரட் துருவல் முழ்கும் அளவு பால் விட்டு திக்காக வரும் வரை கிளறனும். அப்புறம் தேவையான அளவு சக்கரை போட்டு இன்னும் கொஞ்சம் நெய் விட்டு நல்லா கிளறனும். சேர்ந்து வரும்போது நெய்ல பொரிச்சு வச்சு இருக்க முந்திரி, திராட்சை போட்டு கிளறி இறக்கினால் கேரட் அல்வா ரெடி.


Author: Priya ram
•Monday, July 25, 2011
தக்காளி தொக்கு இந்த மாதிரி செய்தால் தான் என் கணவருக்கு புடிக்கும்.
தக்காளியை  அரச்சிட்டு செய்தால்  ரொம்ப விரும்பி சாப்பிட மாட்டார்.   



தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
கடலை எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
மஞ்சள் பொடி


செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு உப்பு, மஞ்சள் பொடி, வறட்டு மிளகாய் பொடி போட்டு நன்றாக கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைத்து விடவும். 5  நிமிஷம் கழித்து நன்றாக கிளறி விடவும். பச்சை வாசனை போய் எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.






நிறைய எண்ணெய் விட்டு இந்த தக்காளி தொக்கு செய்தேன். ஒரு வாரம் வந்தால் கூட  காலைல இட்லி, தோசை, சப்பாத்தி செய்யும் போது எல்லாம் தொட்டுக்க என்னனு தேட வேண்டாம்னு. ஆனால் வீட்டுல  2  நாள்ல காலி பண்ணிட்டாங்க. இந்த முறைல செய்தாலும் ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க.  
Author: Priya ram
•Tuesday, July 19, 2011
 நிறைய மணி வச்சு, டாலர் வச்சு நீளமா கருகமணி மாலை பண்ணனும்னு ஆசையா இருந்தது. அதன் வெளிப்பாடு தான் இது. இதுலே ரெண்டு மாடல்ல பண்ணி இருக்கேன்.









Author: Priya ram
•Thursday, July 14, 2011
ஆர்கண்டி பூக்களை நான் ஒரு பதிவில் போட்டு இருக்கேன். 
அந்த பூக்களை எப்படி செய்வதுனு இந்த பதிவில் போடுகிறேன். 
தேவையான பொருட்கள் :
ஆர்கண்டி துணி - 1 மீட்டர் ( 25  ரூபாய் தான் இது. இந்த 1  மீட்டரில் நிறைய பூக்கள் செய்யலாம் )
கத்திரிக்கோல் 
அலுமினிய கம்பி (பெரிய சைஸ்-ல கிடைக்கும் ஒரு கம்பியை  ரெண்டா கட் பண்ணி ரெண்டு பூ செய்ய யூஸ் பண்ணிக்கலாம் )
கட்டர்
அர்டிபிசியல் இலை
பஞ்சு
பெவிகால்
பச்சை ப்லோரல் டேப்
துணி கலர்ல இருக்க நூல்
இன்ச் டேப்




பஞ்சு, பெவிகால், இன்ச் டேப்  போட்டோ -ல வைக்க மறந்துட்டேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
செய்முறை :
 நீட்டா இருக்க கம்பியை இந்த மாதிரி ரெண்டா கட் பண்ணி தேவையான எண்ணிக்கை எடுத்துக்கணும்.



துணியை இன்ச் டேப் வச்சு நீல வாட்டில் 7cm , அகலம் வாட்டில் 7cm  
இருக்க மாதிரி லைன் போட்டுக்கணும். இதுல ஒரு ஒரு கட்டமும் 
 7cm  * 7cm  இருக்கு.




கத்திரிகோல் வச்சு துணியை  கட் பண்ணி இந்த மாதிரி சின்ன சின்ன துண்டா எடுத்துக்கணும். இப்போ நான் 5  பூவுக்கு ரெண்டு லைன் தான் கட் பண்ணி எடுத்து இருக்கேன்.



இந்த மாதிரி ஒரு துணியை எடுத்துக்கணும். 


அதை இந்த மாதிரி ரெண்டு பக்கமும் பாதியா மடிச்சுக்கணும்.


அப்புறம் மேல இருந்து கீழ கரெக்ட் டா பாதியா மடிச்சுக்கணும்.



மடிச்ச நுனியை கீழ left hand கட்டை விரலால் அழுந்த புடிச்சு கிட்டு மேல ரெண்டு முனையையும் கம்பியால் வெளி பக்கம் உருட்டி விடனும்.


உருட்டி விட்டதும் பின் பக்கம் இப்படி தான் இருக்கும் துணி.



உருட்டிய பக்கத்தை பின் பக்கமாக வச்சு கிட்டு left hand கட்டை விரலால் கிழே நுனியை புடிச்சு கிட்டு, ரைட் hand கட்டை விரலால் துணியின் நடுவில் அழுத்தி கீழே நுனியை சுத்தணும்.  துணியோட நடுவில் கட்டை விரல் அழுத்தமும், கீழே சுத்தி இருப்பதும்  படத்தை பார்த்தா புரியும்.



இந்த மாதிரி நிறைய இதழ்கள் செய்து வச்சுக்கணும். ஒரு பூவுக்கு குறைந்தது  15  இதழ்கள் வச்சா தான் நல்லா இருக்கும்.



கம்பியோட ஒரு முனைல பெவிகால் தடவி பஞ்சு கொஞ்சம் எடுத்து ஒட்டிக்கணும். அப்புறம் அது மேல ஒரு துண்டு துணியை மூடி சுத்தி நூல் வச்சு இருக்க கட்டிடணும். (பூ தொடுப்பது போல் கட்டனும். )



பூ முழுக்க பண்ணற வரை நூலை கட் பண்ணிக்காம ஒரு ஒரு இதழாக வச்சு பூ தொடுப்பது போல் கட்டிகிட்டே வரணும். இதழ் வச்சு கட்டும் முன் இதழ் கீழ உருட்டினதை கொஞ்சம் லூஸ் பண்ணிக்கலாம். (அப்போ தான் கீழ ரொம்ப பெரிய உருண்டையா தெரியாது )


இதழ் வைக்கும் போது பக்கத்துல பக்கத்துல காலியா இருக்க இடம் பார்த்து வைக்கணும். வச்ச பக்கமே நிறைய இதழ் வைக்க கூடாது. பார்த்து வைக்கணும்.  



எல்லா இதழும் வச்சதும் இந்த மாதிரி அழகான பூ கிடைச்சிடும். நூலால இருக்க கட்டிட்டு நூலை கட் பண்ணிடலாம்.



பூவோட கீழ இப்படி தான் இருக்கும். நிறைய உருண்டையா இல்லாம இருக்கும்.



பச்சை ப்லோரல் டேப் ல பசை  இருக்கும். அப்படியே வச்சு டைட்டா சுத்தினா காம்பு ரெடி ஆகிடும்.

காம்புடன் பூ ரெடி.



ஆர்டிபிசியல் இலையில் ஒரு ஓட்டை இருக்கும். இந்த பூவின் காம்பை  அந்த ஓட்டைல விட்டு எடுத்தா இலையும் செட் ஆகிடும்.


நிறைய பூ செய்து இந்த மாதிரி பூங்கொத்து செய்யலாம்.



எங்க வீட்டுல இந்த மாதிரி சட்டத்துல பூ இருக்க மாதிரி முன்னா.......டி வாங்கி இருக்காங்க. பசங்க விளையாடி பூவெல்லாம் எங்கயோ தூக்கி போட்டு இருக்காங்க. அதனால வெறும் சட்டம் மட்டும் இருந்தது. இந்த பூக்கள் செய்து, அலுமினியம் பாயில் பேப்பர் சுத்தி வர கொழல்- ல கிப்ட் பேப்பர் சுத்தி பிக்ஸ் பண்ணி அதுல பூ போட்டு ஹால்ல மாட்டி இருக்கேன்.


எங்க மாமனார் இதை பார்த்து விட்டு இன்னொரு சட்டம் வாங்கி தரேன். இன்னும் ஒன்னு பண்ணிடுன்னு சொல்லிட்டு இருக்கார்.எங்க நாத்தனார் எனக்கு 30  பூ பண்ணி கொடு நான் நிறைய பாட் வச்சு இருக்கேன், அதுல எல்லாம் போட்டுக்கறேன்னு சொன்னாங்க.  நான் முதலில் பண்ணது லைட் பிங்க் கலர். இப்போ ரெட் கலர். அதை விட எனக்கு இது ரொம்ப புடிச்சு இருக்கு.
Author: Priya ram
•Wednesday, July 13, 2011
கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மா வெள்ளை சேவை செய்து அதுல லெமன் சேவை, தேங்காய் சேவை, எள்ளு பொடி சேவை, மாங்காய் சேவை எல்லாம் செய்வாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க தனியா சிங்கப்பூர் ல இருக்கும் போது அவருக்கு அம்மா மாதிரியே செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கணும்னு ஆசை பட்டேன். அம்மாவே அரிசியை களைந்து உணர்த்தி மெசின் - ல மாவா அரச்சு கொடுத்து அனுப்பி இருந்தாங்க. அதுல கொழுக்கட்டை பண்ணலாம்னு அவங்க செய்து தந்தாங்க. அதே மாவு யூஸ் பண்ணி முறுக்கு கொழல் வச்சு சேவை பண்ண ட்ரை பண்ணேன். ஆவில வெந்து வந்ததும் கொஞ்சம் தடியா நூடல்ஸ் மாதிரி இருந்தது.

அப்புறம் இந்தியா வந்ததும் எங்க சித்தி கிட்ட ஒரு பெரிய கொழல்
இருந்தது. அதை வாங்கிட்டு வந்து  இரண்டாவது முறை ட்ரை பண்ணேன்.  அதுலயும் ஒழுங்கா வரலை.



இந்த கொழல் தான் அது. இதுல மாவு போட்டு கீழ தட்டு வச்சு மேல ஒருத்தர் பிழிய,  ஒருத்தர் கொழலின் மூணு காலையும் புடிச்சுகிட்டே கீழ தட்டை சுத்தணும். அப்போ தான் மேல மேல மாவு விழாது. அப்புறம் பிழிந்ததை ஆவில வச்சு எடுக்கணும். இந்த முறையிலும் சேவை சரியா வரலை.





அப்புறம் ஒரு முறை ரிலையன்ஸ் ப்ரெஷ் போகும் போது இந்த சேவை பாக்கெட் பார்த்தேன். இதை வாங்கி ட்ரை பண்ணேன். நல்ல வெள்ளையா மெலிசா சேவை அருமையா வந்தது.   பால், சக்கரை போட்டு கொடுத்தேன். அது என்னவருக்கு புடிக்கலை.



CONCORD PURE RICE SEVAI.....  
என்னவர் ஒரு நாள் கோவில் போறத்துக்காக காலைல வந்து, எல்லோரும் 10 நிமிஷத்துல  ரெடி ஆகுங்க செங்கல்பட்டு தாண்டி ஒரு கோவில் இருக்கு போயிட்டு வந்துடலாம்னு சொன்னார். என்னவர் கோவில் உள்ள போனா சிலை, கல்வெட்டுன்னு பார்த்து கிட்டே இருப்பார். அவர் கூட போனா அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வரவே முடியாது. என்னாலையும் பசி தாங்க முடியாது.  உடனே என்ன செய்யலாம்னு யோசிச்சேன்....டக்குன்னு சேவை நியாபகம் வர இந்த தேங்காய் சேவை பண்ணி பாக்ஸ்-ல போட்டு எடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம்.  அவருக்கும்  ரொம்ப புடிச்சு இருந்தது.


அந்த பாக்கெட்லையே எப்படி பண்ணனும்னு இருக்கும். இருந்தாலும் நானும் ஒரு முறை சொல்லிக்கறேன்...  

சேவையை இந்த மாதிரி பாத்திரத்தில் எடுத்துக்கணும்.
வெந்நீர் தண்ணி கொதிக்க வச்சு சேவை முழுகற மாதிரி தண்ணி விட்டு மூடி வச்சுடணும். 3 - 5 நிமிஷம் கழிச்சு அதிகமா இருக்க தண்ணிய வடிகட்டிட்டா சேவை கிடைச்சுடும்.

தேங்காய் சேவை செய்ய தேங்காய் துருவி எடுத்துக்கணும்.





தேங்காய் சாதம் செய்வது போல் வாணலியில் எண்ணெய், கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி பருப்பு போட்டு வறுத்து தேங்காயும் போட்டு வதக்கணும். அப்புறம் அதுல செய்து வைத்து இருக்க சேவையை கொட்டி கிளறினா தேங்காய் சேவை ரெடி.

நான் பச்சை மிளகாய் இல்லாததால் வரமிளகாய் போட்டு இருக்கேன்.


இதுலயே அடுத்தது எலுமிச்சை சேவை பண்ணனும். எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அம்மா கையாள பண்ணற எள்ளு பொடி சேவை தான். அதையும் ட்ரை பண்ணிட்டு போடோஸ் போஸ்ட் பண்ணறேன்.    


இப்போ எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் இந்த சேவை வாங்குங்க ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிட்டு இருக்கேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.....

Author: Priya ram
•Saturday, July 09, 2011
என்னோட தங்க மரம் போஸ்ட்டில் உபயோகிச்ச மணிகளை வைத்து இந்த மணி  செட் பண்ணேன். இதில் நான் கழுத்துக்கு மணி, கம்மல், கைக்கு ப்ரேஸ்லெட், காலுக்கு கொலுசு எல்லாம் பண்ணேன். முதலில் காலுக்கு கொலுசு பண்ணும் போது நிறைய மணி வச்சு செய்தேன். அப்புறம் மூணு மூணு மணி மட்டும் வைத்து செய்தேன். ரெண்டையும் போஸ்ட் பண்ணி இருக்கேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.




Author: Priya ram
•Wednesday, July 06, 2011
quilling paper இந்த பேப்பர் எப்படி இருக்கும்.... எப்படி இதுல பூக்கள் மாதிரி பண்ணறதுன்னு காண்பிக்க இந்த பதிவு. இந்த பேப்பர் கடைல வாங்கும் போதே இதனுடன் ஒரு டூல் தருவாங்க. அதை வச்சு தான் பூக்கள் பண்ணுவோம்.
மொத்தமா quilling  பேப்பர் கிட் வாங்கினா 125  ரூபாய் ஆகும். அதற்க்கு பதில் கலர் A4  பேப்பர் வாங்கி தேவையான அளவு கட் பண்ணி எடுத்துக்கலாம். டூல்க்கு குச்சியை இந்த மாதிரி கீறி எடுத்துக்கலாம். அதை வச்சு பூக்கள் நிறைய செய்யலாம்.


கலர் A4  பேப்பர் வாங்கி இந்த மாதிரி கட் பண்ணி வச்சுக்கணும்.


 இது தான் கிட் உடன் வரக்கூடிய டூல்


அந்த டூல் ல பேப்பர் வச்சு இப்படி தான் சுத்தணும்.



இந்த மாதிரி சுத்தி கிட்டே வரணும்.



இந்த மாதிரி முழுக்க சுத்தியதும் இந்த மாதிரி லூசாக எடுத்து வச்சுக்கணும்.


கொஞ்சம் லூசாகவே வச்சு முனையை மட்டும் பெவிகால் வைத்து ஒட்டிடனும்.




ஒரு பக்கம் மட்டும் நீட்டு வாக்கில் புடிச்சு அழுத்தினா திலகம் வடிவம் கிடைச்சிடும். இந்த மாதிரி நிறைய வடிவம் மடிக்கலாம்.



நடுவில் ஒரு வட்டம் வச்சு சுத்தி திலகம் வச்சு ஒட்டினா  பூ ரெடி.

கான்வாஸ் போர்டு ரெடிமேடா கிடைக்கறது அதுல பூ எல்லாம் வச்சு பெவிகால் வைத்து ஒட்டி ஒரு wall hanging செய்யலாம்.

என்னோட மாமனார் பிறந்த நாளுக்காக நான் இந்த மாதிரி செய்து இருக்கேன். அதை பார்க்க இதை கிளிக் பண்ணுங்க.    http://priyasinterest.blogspot.com/2011/05/quilling-art-2.html



Related Posts Plugin for WordPress, Blogger...