•Tuesday, June 21, 2011
இந்த ரசம் எனக்கு ரொம்ப புடிச்ச ரசம். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணா இந்த ரசம் உங்களுக்கும் புடிச்சுடும். இந்த ரசம் சாதத்துக்கு
கத்தரிக்காய் ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
உப்பு
மிளகாய் பொடி ( கொஞ்சமாக போட்டால் போதும். மிளகு காரம் தான் இந்த ரசத்துக்கு முக்கியம் )
மஞ்சள் பொடி
பெருங்காயம்
நெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 /4 ஸ்பூன்
வறுத்து அரைக்க :
தனியா - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் - 1 /2 கப்
செய்முறை :
துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு தனியாக வேக வைக்கவும்.
புளியை கரைத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி போட்டு மிளகாய் பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
வறுத்து அரைக்க கொடுத்து உள்ளதை வறுத்து அரைத்து வைக்கணும்.
அரைத்த விழுதை வேக வைத்து உள்ள துவரம் பருப்பில் கலந்து புளி தண்ணியில் கொட்டி கொதிக்க விடனும்.
ஒரு கொதி வந்ததும் திக்காக ரசம் வரும் அப்போ 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து நுரைத்து வரும்போது ரசத்தை இறக்கிடணும்.
தனியாக நெய் சுட வைத்து கடுகு மட்டும் தாளித்து கொட்டனும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை நறுக்கி போடணும்.
நல்ல வாசனையோட மைசூர் ரசம் ரெடி. இந்த ரசம் சாதத்துக்கு ரோஸ்ட் காய் ஏதாவது தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும்.
ரசம்
|
5 comments:
ரசம் சூப்பர்! ஆனா வறுத்து அரைச்சு..ம்ம்ம்,வேலை அதிகம் போல தெரியுதே!;)
//இந்த ரசம் சாதத்துக்கு ரோஸ்ட் காய் ஏதாவது தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும்.///அப்படியே ரோஸ்ட் காய் ரெசிப்பியும் போடுங்களேன்,நீங்க எப்படி ரோஸ்ட் பண்ணறேள்னு பார்க்க ஆர்வமா இருக்கு! :)
தேங்காய்...Fresh or Dry coconut பயன்படுத்த வேண்டும்...சாப்பிட ஆசையாக இருக்கு...
நன்றி மகி. நீங்க பண்ணற வேலைக்கு இது எல்லாம் சுலபம் பா. ட்ரை பண்ணி பாருங்க நல்லா இருக்கும். காய் செய்து போஸ்ட் பண்ணறேன் மகி.
நன்றி கீதா. துருவிய தேங்காய் போடணும். எப்படி இருந்தாலும் ஓகே பா. செய்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் திரும்ப திரும்ப செய்வீங்க.
Nice recipe... Rasam is my favourite... good for digestion too...will try sometime... thanks for sharing