•Monday, June 20, 2011
இந்த முறையில் பொரிச்ச கூட்டு செய்வது இன்னும் ஈஸி.
தேவையான பொருட்கள் :
பயத்தம் பருப்பு - 1 கரண்டி
சௌ சௌ - 1 (தேவையான எந்த காய் வேணும்னாலும் போட்டுக்கலாம் )
தக்காளி - 1
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
உப்பு
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
செய்முறை :
குக்கரில் தோல் சீவி பொடியாக நறுக்கிய சௌ சௌ, பயத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி எல்லாம் போட்டு வேக விடனும்.
நல்லா குழைய வெந்தவுடன் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதில் குழைய வெந்த பருப்பை கொட்டி கலந்தால் பொரிச்ச கூட்டு ரெடி.
கூட்டு
|
2 comments:
சூப்பர்ப்...ரொம்ப நல்லா இருக்கு....
நன்றி கீதா. காலைல வேலைல விரைவா இந்த கூட்டு செய்துடலாம். சாதம் வைக்கும் போதே இன்னும் ஒரு தட்டில் கூட்டுக்கு வைத்து விட்டால் சாதம், கூட்டு ஒன்றாக ரெடி ஆகிடும். ஏதாவது ரோஸ்ட் காய் இல்லைனா சிப்ஸ் தொட்டுகிட்டு கூட சாப்பிடலாம்.
அன்னிக்கு சமையலும் சீக்கரம் முடிஞ்சுடும்.
ட்ரை பண்ணி பாருங்க.