Author: Priya ram
•Saturday, June 25, 2011
என்னுடைய இனிய தோழி ஒருத்தங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள்.  அவங்களை நான் நேரில் இதுவரை பார்த்ததில்லை.  மே 2009 - லிருந்து எனக்கு ஒரு   நல்ல தோழியாக இருக்காங்க. அவங்களுக்கு இந்த வருஷம் என்னோட ப்ளாக் -ல இருந்து வாழ்த்துக்களை சொல்ல நினைச்சேன். இனிய கல்யாண நாள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி . :)

உங்களுடைய பிறந்த நாளுக்கு ஸ்வீட் மற்றும் பூ செண்டை தரேன். வாங்கிகோங்க மகி.  . :)


 அவங்களுக்கு மஞ்சள் பூவென்றால் ரொம்ப புடிக்கும். அவங்களோட பேரு ரெண்டு எழுத்து. அவங்க யாருன்னு கண்டு புடிச்சிட்டீங்களா ????? சீக்கரம் போய் உங்களோட வாழ்த்துக்களையும் சொல்லுங்க....
அப்படி உங்களால கண்டு புடிக்க முடியலைனா அந்த ஸ்மைலிஸ் முன்னாடி கிளிக் பண்ணி பாருங்க.


கேசரி ஈஸியா செய்ய கூடிய ஒரு  ஸ்வீட்.  1  : 1  1 /2  : 2  இதான் இந்த கேசரி செய்வதற்கான ரேஷியோ.

தேவையான பொருட்கள் :

ரவை - 1  கப் 
தண்ணீர் - 1  1 /2  கப் 
சக்கரை - 2  கப் ( இனிப்பு அதிகம் வேண்டும்னு நினைக்கறவங்க தேவையான அளவு அதிகரிச்சுக்கலாம் )
ஏலக்காய் 
முந்திரி பருப்பு 
நெய் 
கேசரி பவுடர் 

செய்முறை :

வாணலியில் நெய் கொஞ்சம் விட்டு முந்திரி பருப்பு வறுத்து தனியாக எடுத்துக்கணும். 
அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு ரவை போட்டு வருத்துக்கணும். 
அதுல 1  1 /2 கப் தண்ணீரை விட்டு கேசரி பவுடர் போட்டு நன்றாக கிளறனும். ரவை நன்றாக வெந்து வரும் போது 2 கப் சக்கரை போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி அதுல ஏலக்காய் தட்டி போட்டு, வறுத்த முந்திரியும் போட்டால் கேசரி ரெடி. 

Author: Priya ram
•Friday, June 24, 2011
சீரகம்  ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - ஒரு கை அளவு
கடலை எண்ணெய்
நெய்
சீரகம் - 1  ஸ்பூன்  
அரிசி - 1  கப்
உப்பு
பச்சை மிளகாய் - 4


ரைத்தா செய்ய தேவையான பொருட்கள் :

கேரட் - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கொத்துமல்லி
எண்ணெய்
கடுகு




செய்முறை :
குக்கரில் எண்ணெய், நெய் கொஞ்சம் விட்டு சீரகம் போட்டு வெடிக்க விடனும்.
வெடிச்சதும் அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு வறுக்கணும். பிறகு பச்சை  பட்டாணி, முந்திரி பருப்பு போட்டு வறுக்கணும்.
அரிசி களைந்து போட்டு வறுத்து அதில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு  2  விசில் விடனும்.( நான் ஒரு கப் அரிசிக்கு 2  1 /2  கப் தண்ணீர் விட்டேன் ) பாஸ்மதி அரிசி இருந்தால் அதை பயன்படுத்தலாம். எங்க வீட்டுல யாரும் பாஸ்மதி அரிசி சாப்பிட மாட்டாங்க அதனால  நான் பச்சரிசி - ல தான் பண்ணேன்.
பிரஷர் போனதும் நன்றாக கலந்தால் சீரகம் ரைஸ் ரெடி.



ரைத்தா செய்முறை :
வெங்காயம்,தக்காளி,  கொத்தமல்லி பொடியாக நறுக்கி போட்டுக்கணும். கேரட் துருவி போட்டுக்கணும். உப்பு போட்டு தயிர் விட்டு கடுகு தாளித்து கொட்டினால் ரைத்தா ரெடி.
Author: Priya ram
•Thursday, June 23, 2011
கல்யாணம்னா இந்த மாங்காய் ஊறுகாய் இருக்கும். இந்த ஊறுகாய் செய்வதும் ரொம்ப ஈஸி தான்.




தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1
உப்பு
பெருங்காயம்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய் - 3  ஸ்பூன்
கடுகு



செய்முறை :

மாங்காயை பொடியாக நறுக்கி அதில் உப்பு, பெருங்காயம், வறட்டு மிளகாய் பொடி போட்டுக்கணும்.
எண்ணெய் நன்றாக சுட வச்சு கடுகு தாளித்து மாங்காய்ல கொட்டினா மாங்காய் ஊறுகாய் ரெடி.




Author: Priya ram
•Tuesday, June 21, 2011
இந்த ரசம் எனக்கு ரொம்ப புடிச்ச ரசம். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணா இந்த ரசம் உங்களுக்கும் புடிச்சுடும். இந்த ரசம் சாதத்துக்கு
கத்தரிக்காய் ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட நல்லா இருக்கும்.



தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1  கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 1
உப்பு
மிளகாய் பொடி ( கொஞ்சமாக போட்டால் போதும். மிளகு காரம் தான் இந்த ரசத்துக்கு முக்கியம் )
மஞ்சள் பொடி
பெருங்காயம்
நெய் - 1  ஸ்பூன்
கடுகு - 1 /4 ஸ்பூன்

வறுத்து அரைக்க :

தனியா - 2  ஸ்பூன்
மிளகு - 2  ஸ்பூன்
சீரகம் - 2  ஸ்பூன்
கடலை பருப்பு - 1  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
தேங்காய் - 1 /2 கப்




செய்முறை :

துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு தனியாக வேக வைக்கவும்.
புளியை கரைத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி போட்டு மிளகாய் பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
வறுத்து அரைக்க கொடுத்து உள்ளதை வறுத்து அரைத்து வைக்கணும்.
அரைத்த விழுதை வேக வைத்து உள்ள துவரம் பருப்பில் கலந்து புளி தண்ணியில் கொட்டி கொதிக்க விடனும்.
ஒரு கொதி வந்ததும் திக்காக ரசம் வரும் அப்போ 2  டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து நுரைத்து வரும்போது ரசத்தை இறக்கிடணும்.
தனியாக நெய் சுட வைத்து கடுகு மட்டும் தாளித்து கொட்டனும்.
கொத்தமல்லி, கருவேப்பிலை நறுக்கி போடணும்.
நல்ல வாசனையோட மைசூர் ரசம் ரெடி. இந்த ரசம் சாதத்துக்கு ரோஸ்ட் காய் ஏதாவது தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ரா இருக்கும்.
Author: Priya ram
•Monday, June 20, 2011
இந்த முறையில் பொரிச்ச கூட்டு செய்வது இன்னும் ஈஸி.



தேவையான பொருட்கள் :
பயத்தம் பருப்பு - 1  கரண்டி
சௌ சௌ - 1 (தேவையான எந்த காய் வேணும்னாலும் போட்டுக்கலாம் )
தக்காளி - 1
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
உப்பு
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை




செய்முறை :

குக்கரில் தோல் சீவி பொடியாக நறுக்கிய சௌ சௌ, பயத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி எல்லாம் போட்டு வேக விடனும்.
நல்லா குழைய வெந்தவுடன் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதில் குழைய வெந்த பருப்பை கொட்டி கலந்தால் பொரிச்ச கூட்டு ரெடி.


Author: Priya ram
•Sunday, June 19, 2011
முழுவதும் கோல்ட் மணி வைத்து இந்த மாலை செய்தேன்.


Author: Priya ram
•Friday, June 17, 2011
தேங்காய் துவையல் செய்வது ரொம்ப ஈஸி. கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பாக்ஸ் - ல எடுத்து வச்சுக்கணும். எப்போ எல்லாம் தேங்காய் துவையல் தேவை படுதோ அப்போவெல்லாம் இந்த வறுத்த பருப்பு, மிளகாயை வைத்து, தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு உப்பு போட்டு அரைத்தால் தேங்காய் துவையல் ரெடி. வத்த கொழம்பு செய்யும் போது இந்த துவையல் செய்து துவையல் சாதத்துக்கு வத்த கொழம்பு தொட்டுண்டு சாப்பிட்டா  பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.


ரசம் சாதத்துக்கு துவையல் தொட்டுண்டு சாப்பிட்டா கூட நல்லா இருக்கும். துவையல் சாதத்துக்கு பொரிச்ச கூட்டு கூட தொட்டுண்டு சாப்பிடலாம். ஆனா வத்த கொழம்பு தான் பெஸ்ட் காம்பினேஷன்.


Author: Priya ram
•Thursday, June 16, 2011
இதற்க்கு முன்பு  ஒரு பதிவில் சிவப்பு, பச்சை, மெரூன், ப்ளூ என தனி தனி கலர் - ல மாலை போட்டு போஸ்ட் பண்ணி இருந்தேன். இந்த கலர் மணி அனைத்தும் சேர்த்து ஒரு மாலை பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்க ட்ரை பண்ணது தான் இந்த மல்டி கலர் மணி மாலை. இப்போ தெரிஞ்சவங்க எல்லோரும் இந்த மல்டி கலர் மணி மாலையை தான் கேட்கறாங்க. பார்த்து விட்டு எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க.....




Author: Priya ram
•Wednesday, June 15, 2011
இது என்னோட ஐம்பதாவது போஸ்ட்.
எங்க மாமியார்காக நான் செய்த உல்லன்  பர்ஸ் இது.





ரன்னர் ஒரு பக்கம் கோர்த்து ஸ்டிச் பண்ணா பர்ஸ் ரெடி.
Author: Priya ram
•Tuesday, June 14, 2011
சிவப்பு கிறிஸ்டல் மணி வைத்து இந்த மாலையை செய்தேன்.




Author: Priya ram
•Sunday, June 12, 2011



போண்டா செய்ய தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1  கப்
மிளகு
உப்பு
அரிசி மாவு
தேங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது

சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

தேங்காய்,
பொட்டுகடலை
பச்சை மிளகாய்
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை





செய்முறை :

உளுத்தம் பருப்பு 1 /2  மணி நேரம் ஊற வச்சு தண்ணி கொஞ்சமா விட்டு அரச்சுக்கணும்.
மாவுல கொஞ்சமா அரிசி மாவு, உப்பு, மிளகு, சின்ன சின்னதாய் நறுக்கிய தேங்காய் போட்டு நன்றாக பிசையனும்.
எண்ணெய் காய வச்சு அதில் உருட்டி போட்டு பொறித்து எடுத்தால்  போண்டா தயார்.

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து  தனியா எடுத்துக்கணும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சட்னி ரெடி.





Author: Priya ram
•Friday, June 10, 2011
சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெண்டு விதத்தில் செய்யலாம். அதில் oru வகை idhu.

தேவையான பொருட்கள் :

சௌ சௌ - 1
பயத்தம் பருப்பு - 1  கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் பொடி - 1  சிட்டிக்கை
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
எண்ணெய்


அரைக்க :
மிளகு - 1  ஸ்பூன்
சீரகம் - 1  ஸ்பூன்
தேங்காய் - தேவையான அளவு




செய்முறை :

சௌ சௌ- வை சின்ன சின்னதா கட் பண்ணிக்கணும்.
குக்கர் - ல பயத்தம் பருப்பு, சௌ சௌ, தக்காளி,மஞ்சள் பொடி,  கொஞ்சம் உப்பு  போட்டு குழைய வேக வைக்கணும்.
அரைக்க கொடுத்து உள்ளதை அரைச்சிக்கனும்.
வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வேக வைத்து இருக்கும் பருப்பை மசித்து கொட்டி, அரச்சு வச்சு irukkaradhayum கொட்டி, உப்பு போட்டு ஒரு 2  நிமிடம் கொதிக்க விடனும்.
pachchai வாசனை போனதும் இறக்கினால் பொரிச்ச கூட்டு redi.




Author: Priya ram
•Wednesday, June 08, 2011


ஓமப்பொடி செய்ய தேவையான பொருட்கள் :

ஓமம் - 1  ஸ்பூன்
கடலை மாவு - 2  கப்
அரிசி மாவு - 1  கப்
உப்பு
பெருங்காயம்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்






செய்முறை :
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சமாக தண்ணீர்  விட்டு பிசைந்து கொள்ளவும். குழலில் ஓமப்பொடி  தட்டு போட்டு பிசைந்த  மாவை போட்டு  எண்ணையில் பிழிந்து பொறித்து எடுத்தால் ஓமப்பொடி  தயார்.
Related Posts Plugin for WordPress, Blogger...